பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 41 இதைப் படித்த நம்மில் பாதிப் பேராகிலும் காஞ்சிபுரம் வைத்தியநாதசாமி அய்யர் போன்று ஊக்க வைத்தியராக மாறினால் உலகம் இத்துணை அல்லல் படாதே! வைத்தியநாதசாமி அய்யர், காலத்தாற் செய்த உதவியால் மூன்றாம் வகுப்பை முதல் முறை யில் தேறியதுபோல், பின்னர் எல்லா வகுப்புகளிலும் ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி பெற்றேன். நான்காம் வகுப்பு முடியும்வரை 'தேவல்ல இராமசுவாமி அய்யர் நடுநிலைப் பள்ளி'யில் படித்த நான், ஐந்தாம் வகுப்பிற்கு 'யூ.எப்.சி.எம். உயர்நிலைப் பள்ளி'க்குப் போனேன். இன்றும் அப்பள்ளி நற்பணியாற்றி வருகிறது. ஆனால், பெயர் மாற்றம் பெற்றுள்ளது. பல ஆண்டுகளாக, ஆண்டர்சன் உயர்நிலைப் பள்ளி' என்னும் பெயரில் நிலவுகிறது. முதலில் சேர்ந்த பள்ளியோ வீட்டுக்கு அருகில், அதே வாடையில் தெருவில் இறங்காமலே நடந்து போகலாம். ஆனால் போய்ச் சேர்ந்த உயிர்நிலைப் பள்ளியோ, சற்றுத் தூரத்தில் இருந்தது. அதை அடையக் காலையில், வண்டிகள் நிறைந்த நெல்லு மண்டித் தெரு வழியாகப் போக வேண்டும். சிறியவனாகிய எனக்கு அது ஆபத்தானது. இருப்பினும் அங்கே போவானேன்? இருந்த இடத்தில் இடர்ப்பாடா? நெய்யாடிவாக்கத்தில் நடந்ததுபோல், நடக்கக்கூடாத எதுவும் நடந்துவிட்டதா? 4. கிறித்துவ உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தேன் தேவல்ல இராமசாமி அய்யர் நடுநிலைப் பள்ளியில் ஈராண்டு படித்தேன்; எவ்வித இடையூறும் எழவில்லை. நானும் பிழையேதும் செய்யவில்லை. ஆயினும் தொலைவில் உள்ள வேறு பள்ளிக்கு மாறிவிட நேர்ந்தது. அந்தக் கதையைக் கேளுங்கள். அப்போது, யூ.எப்.சி.எம் உயர்நிலைப் பள்ளியின் தலைமை யாசிரியர் திரு. ஞானாதிக்கம் என்பவர். அவர் திக்கெல்லாம் புகழும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். மிடுக்கான மேனாட்டு உடையில் கச்சிதமாகப் பள்ளிக்குச் செல்வார். திரு. ஞானாதிக்கம் நான் படித்த நடுநிலைப் பள்ளிக்கு நான்காம் வீட்டில் குடியிருந்து வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/83&oldid=787789" இலிருந்து மீள்விக்கப்பட்டது