பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

செயலர், மற்றும் உயர் கல்வி, முதியோர் கல்வி, பொது நூலகங்கள் ஆகியவற்றின் இயக்குநராகத் தொண்டாற்றும் வாயப்புப் பெற்றேன்.

கல்வித் துறையின் கொடுமுடியாகக் கருதப்படும் சென்னைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகப் பணிபுரியும் பேறு பெற்றேன்.

என்னை, இப்பதவிகள் இலங்கை, பிரிட்டன், பிரான்ஸ், சுவிட்சர்லாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், சோவியத் நாடு, கிழக்கு ஜெர்மனி, அமெரிக்கா, கனடா, பிலிப்பைன்ஸ், ஜப்பான், ஹாங்காங், மலேசியா, சிங்கப்பூர், இத்தாலி, கானா ஆகிய உலக நாடுகளைக் கண்டு வரச் செய்தன.

மனிதன் தனி ஆள் அல்ல; சமுதாயத்தின் சிறுதுளி. தனிமனித வளர்ச்சியும் தேய்வும் ஒரளவு அவன் கைகளில் உள்ளது; பெருமளவு, சமுதாயச் சூழல், காலத்தின் எழுச்சிகள் உணர்வுகள், தொடர்பு கொள்ளும் மக்களின் தன்மை ஆகியவற்றால் முடிவு செய்யப்படு கின்றன.

'தொலைவிலிருந்து இயக்குதல்' வளர்ந்து வரும் புதிய செயல் முறையாம். ஞாயிறு அனைய காந்தியடிகளார், தந்தை பெரியார், மாமேதை லெனின் ஆகியோர் என்னை வெவ்வேறு வகையில் ஆளாக்கியுள்ளனர்.

நான் யார்? மொழியால் தமிழன் நாட்டு வழி இந்தியன்! இன வழி மனித இனத்தவன்!

நான் நடந்து வந்த வாழ்க்கையாம் நெடுஞ்சாலையை எண்ணிப்பார்க்கிறேன். நினைவுகள், அலை அலையாக எழுகின்றன. பற்பல காட்சிகள் மின்னுகின்றன. பெற்ற எழுச்சிகள், இயைந்த வாய்ப்புகள், குறுக்கிட்ட நெருக்கடிகள், உதவி புரிந்த நல்லோர் பெற்ற சாதனைகள் ஆகியவை ஒளி விடுகின்றன. எத்தனை நல்லோர்! எவ்வளவு பாடுகள் எவ்வளவு தியாகங்கள்!

இந் நினைவுகள், என்னைத் தன்னிலைப் படுத்துகின்றன. 'யான்', 'எனது' என்னும் செருக்கறுக்க உதவுகின்றன.

'நான். நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்! பல பெரியோர்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறேன்! எண்னற்ற எளியோர்க்கும் பெருமளவு கடன்பட்டிருக்கிறேன். அவர்களாலேயே நான் உயர்ந்தேன்' என்ற உணர்வு சுரக்கிறது. பழுத்த நெற்பயிரெனத் தலை வனங்குகிறேன்.

நீர்த்துவி. எப்போது பெருமை பெறுகிறது எப்போது பெரும் பயன் விளைவிக்கிறது. கோடி கோடி நீர்த் துணிைகளோடு இரண்டறக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-1.pdf/9&oldid=1204955" இலிருந்து மீள்விக்கப்பட்டது