பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 87

‘பெரிய குடியிருப்பு: நிறைய பேர் பள்ளிக்கு வருகிறார்கள்: அய்ந்தாண்டுகளாக நிற்காமல் வருகிறார்கள்.

‘எனவே, குடியிருப்புப் பள்ளியைத் தனியார் பள்ளியாக, கல்வித்துறை ஏற்றுக் கொள்ளலாம். வேண்டுமானால் அப்படிச் செய்யப் போகிறோமென்று ஆட்சிக் குழுவிற்கு முன்னறிவிப்பு கொடுத்துவிட்டு, அனுமதியுங்கள்’.

மேற்கூறியவாறு, மேலுக்கு பரிந்துரைத்தேன். சில வாரங்கள் சென்றன. ஆனை வந்தது. நல்ல ஆணையே!

வாலில் நஞ்சு

தனியார் பள்ளியைக் கொடுக்கும் ஆணையைப் படித்து மகிழ்ந்தேன். ஆனால் அதன் வாலில் நஞ்சு இருந்தது.

‘மாவட்டக் கல்வி அலுவலர் இப் பள்ளி பற்றி இவ்வளவு அக்கறை காட்டி இருக்க வேண்டாம் ‘ என்று சொட்டு இருந்தது. ஒதுக்கப் பட்டவர்களுக்குப் பாடுபடாவிட்டால் பிறவி வீண் என்று உறுதி கொண்டேன்.

ஆதி ஆந்திரர்களுக்கு நீதியும் வாய்ப்பும் பெற்றுத் தரும் கருவியாக, நான் பயன்பட்டது பற்றி மகிழ்ந்தேன்.

தில்லி பயணம்

விசாகப்பட்டினம் மாவட்ட, போர் ஆதரவுக் குழுவின் கூட்டம் ஒன்று, விசாகையில் நடந்தது.

அக் குழுவில் நான் ஒர் உறுப்பினர். தென் விசாகப்பட்டினம் மாவட்டக் கல்வி அலுவலர் ஒர் உறுப்பினர்.

கூட்ட அறிவிப்பு வந்ததும், தென் விசாகை மாவட்டக்கல்வி அலுவலர், எனக்குக் கடிதம் எழுதினார். தன் வீட்டில் தங்கும்படி அழைத்தார். என் மனைவியையும் அழைத்து வரும்படி கூறினார். அப்படியே சென்றோம்.

தெலுங்கு அய்யராகிய திரு. சத்திய நாராயணா வீட்டில் தங்கினோம்.

தமது குடும்பத்தவர்போல் எங்களை நடத்தினார். வீட்டிலிருந்த தாய்க்குலமும் அப்படியே நடந்து கொண்டதை மறக்க முடியுமா?

கோகுளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது, அனைத்து இந்திய அரசுப் பணியாளர் பொறுக்குக் குழு ஒரு விளம்பரம் செய்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/103&oldid=622956" இலிருந்து மீள்விக்கப்பட்டது