பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

B8 நினைவு அலைகள்

சென்னை மாகாணத் தமிழ் நாட்டுப் பகுதிக்கு ஒரு போர் ஆதயவு அமைப்பாளர் தேவை என்பது விளம்பரம்.

அதன் படி ஒன்று, கல்வி இயக்குநர் வழி, என் கைக்கு வந்தது.

பல்கலைக்கழக முதுகலைப் பட்டம், ஆங்கிலத்திலும் தமிழிலும் பொதுக் கூட்டங்களில் சிறப்பாகச் சொற்பொழிவாற்றும் திறன். அலுவலக அனுபவம் ஆகிய தகுதிகள் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எனக்குச் சபலம் தட்டிற்று. மனுச் செய்தேன். நேரடிப் பேட்டிக்கு, வரும்படி சில வாரங்களில் கடிதம் வந்தது.

இருபத்து நான்கு மணிக்குள் புறப்பட்டால்தான், தில்லிக்கு, நேரத்தில் போய்ச் சேர முடியும்.

தற்செயலாக, நான் ஊரில் இருந்ததாலும் விடுமுறை நாள் அல்லவாகையால் வங்கியிலிருந்து பணம் வாங்க முடிந்ததாலும் நேரத்தில் தில்லிக்குப் போய்ச் சேர முடிந்தது.

முதல் வகுப்பில் பயணம் செய்தேன். காலை எட்டு மணி போல், கல்கத்தா போய்ச் சேர்ந்தேன். அங்கிருந்து மாலை தில்லிக்குப் புறப்ப வேண்டும்.

அதுவரை கல்கத்தா இரயில் நிலைய முதல் வகுப்புப் பயணிகள் ஓய்வு அறையில் தங்கினேன்.

அப்போது என்னைக் கவர்ந்தது எது?

முதல் வகுப்புப் பயணிகளுக்குக் கிடைத்த மதிப்பு, பெட்டி பேழைகளை எவரும் திருடி விடுவார்களோ என்ற அச்சம் இல்லாது. நடமாட முடிந்தது ஆகிய இரண்டும் ஆகும்.

இந்து சாயா - முஸ்லீம் சாயா

அதுவரை நான் அறியாத ஒன்றை அப் பயணத்தில் தெரிந்து கொண்டேன். வட இந்திய புகைவண்டி நிலையங்களில், இந்து சாயா (இந்து தேனிர்) ‘முஸ்லீம் சாயா’ என்று கூறி விற்றார்கள் விற்பனையாளர்களின் உடை அழுக்கில், இந்து முஸ்லீம் வேறுபாடு இல்லை.

அத்தகைய வேற்றுமை பாராட்டாத தமிழ் நாட்டில் முஸ்லிம் சிற்றுண்டிச் சாலைகளில் தேiைர் அருந்தப் பழகி இருந்த நான். ஒ:சிடத்தில் முஸ்லீம் சாயாவை வாங்கிக் குடித்தேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/104&oldid=622957" இலிருந்து மீள்விக்கப்பட்டது