பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9C) நினைவு அலைகள்

தமிழ்த் தொடர்பு அற்றுப்போன அவரைவிட எனக்கே, வாய்ப் ! அதிகம் என்ற குறிப்பு பேட்டியில் மின்னிற்று.

நிறைவோடு வந்த வழியே திரும் பினேன். இறுதியியல் அமைப்பாளராக எவரையும் நியமிக்கவில்லை.

சீகாகுளம் திரும்பியதும், அவ்வூர் சப்கலெக்டர் திரு கிராலி என்ற ஆங்கிலேயர் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார். போய்ப் பார்த்தேன்

மொட்டைக் கடிதம் ஒன்றைக்காட்டினார். படித்துப் பார்த்தேன். பதறவில்லை. ‘என் அலுவலகம் சென்று அரை மணியில் உரிய கோப்புகளோடு வருகிறேன்’ என்று கூறிச் சென்றேன். அப்படியே விரைந்து திரும்பி வந்தேன்.

மொட்டைக் கடிதம்

மொட்டைக் கடிதத்தில் என்ன எழுதப்பட்டு இருந்தது? ‘மாவட்டக் கல்வி அலுவலராகிய நெ.து. சுந்தரவடிவேலு அண்மையில் தில் லிக்குப் போய் வந்தார்’ என்றது. அது மறுக்க முடியாத உண்மை.

அந்தச் செலவிற்குப் பணம் ஏது? ‘பாதுகாப்புப் பத்திரம் வாங்கப் பொதுமக்கள் கொடுத்த பணத்தில், ஆயிரம் ரூபாய்களை எடுத்துக் கொண்டு, போய் விட்டார். அதனால் அரசின் நிதியை அரசின் கருவூலத்தில் செலுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கையாடலைக் கண்டுபிடித்துத் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'’, என்பது கடிதத்தின் வேண்டுகோள்.

அலுவலகத்திலிருந்த, பாதுகாப்புப் பத்திரப் பதிவேடுகளையும் என்னுட்ைய அஞ்சல் சேமிப்புக் கணக்குச் சுவடியையும் எடுத்துக் கொண்டு போனேன். சப்கலெக்டர் கிராலியிடம் கொடுத்துப் பார்க்கர் சொன்னேன்.

என்ன நடந்தது? நான் தில்லிக்குப் புறப்படும் நாள் அன்று, இரண்டு மூன்று பெரியவர்கள் வந்து பத்திரங்களுக்கான பணத்தைச் செலுத்தி இரசீது பெற்றுக்கொண்டு போனார்கள். அன்று கருவூலத்தில் பணம் கட்டும் நேரம் தவறிவிட்டது.

அவ்வளவு பெரிய தொகையை என் அலுவலகத்தில் வைத்து விட்டு வெளியூர் போவதற்கு அஞ்சினேன்.

அத்தகைய நிலைகளில் அந்த நிதியை, தலைமை அஞ்சலகத்தில் தற்காலிக வைப்பாகக் கொடுத்து இரசீது பெற்றுக் கொள்ளலாம் என்று விதியிருந்தது. அதன்படி செய்தேன். அதற்கான சான்றைப் பார்த்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/106&oldid=622959" இலிருந்து மீள்விக்கப்பட்டது