பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| TO நினைவு அலைா

அரசியல் உரிமை உணர்வுகளை - சாதிக் கலைப்புக் கருத்துகளை புதிய பொருளியல் முறைக்கு வாதிடும்வாதங்களை நவசக்தி மக்கள் முன் மிகுந்த ஆற்றலுடன் கொண்டு சென்றது.

காங்கிரசை வளர்த்தார்

தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில், காங்கிரசு இயக்கத்தை முன்னின்று வளர்த்த பெருமை, சிறப்பாக நாலைந்து பேர்களுக்கு, உண்டு.

அதில் ஒருவர், திரு. வி. கலியாணசுந்தரனார் என்று திரு. இராசா திரு.வி.க.வின் மணி விழாவின்போது, இளைய தலைமுறைக்க, அடையாளங் காட்டினார். o

தமிழ் நாட்டில் தமிழை மேடைகளில் முழங்க வைத்த பெருமை திரு.வி.க. வையே சேரும் என்று பெரியார் ஈ. வெ. ராமசா போற்றினார்.

தொழிற் சங்கத் தந்தை

‘இந்தியத் தொழிற் சங்க இயக்கத்தின் தந்தையும் தாயும் திரு.வி. என்றால் மிகையல்ல என்று வியந்து வியந்து பாராட்டினார் காமா

இப்படிப் பன்முகத் தொண்டாற்றிய, திரு.வி.க. காங்கிய இயக்கத்தின் முன்னணியில் இருந்து, தமிழகத்தின் காடுமேடெல்லா சுற்றி வந்து, காந்தியத் திட்டங்களைப் பரப்பினார்.

அக் காங்கிரசை விட்டு திரு.வி.க.வும் விலகினார். பெரியார் ஈ.வெ. ராமசாமி விலகிய அடுத்த ஆண்டு, திரு.வி.க.வும் விலகினார். காரணம் ஒன்றும் அல்ல.

காங்கிரசுக் கொள்கைகளைப் பரப்பும் பணியில் மூழ்கி இருந்து, போதே திரு.வி.க. தொழிற்சங்க உரிமை பற்றி, நலன் பற்றி கருத்து செலுத்தினார்.

இந்தியாவின் முதல் தொழிற் சங்கமாகிய சென்னைத் தொழிலாளர் சங்கத்தை, வாடியா, செல்வபதி செட்டியார், இராமானுஜ ‘ ஆகியோரோடு சேர்ந்து தொடங்கினார்.

தொடக்கத்தில் துணைத் தலைவராக இருந்து இயங்கினார். பின்னர் பதினோர் ஆண்டுகள் தலைவராக விளங்கினார். வாழ்நாள் முழுவதும் அச்சங்கத்தின் நண்பராக, வழிகாட்டியாக, தோழா

செயல்பட்டார்.

1921ஆம் ஆண்டு பக்கிங்காம் ஆலையில் வேலை நிறுத்தம் நடந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/126&oldid=622988" இலிருந்து மீள்விக்கப்பட்டது