பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ெ து. சுந்தரவடிவேலு 123

இருவரும் என் கருத்தை ஏற்றனர். முதல் வரும் தலைவரும் மேலும் இரண்டொரு நண்பர்களை அழைத்துக்கொண்டு சென்னை சென்று துணைவேந்தரைக் காணவும் முடிவு செய்தார்கள்.

முடிவு செய்தபடி, சென்னைக்குச் சென்றார்கள்; முதலியாரைக் கண்டார்கள். பட்டப் படிப்பிற்கென்று தனியாகக் கட்டடம் தேவை: கூடுதலாகத் தளவாடங்கள் தேவை; நூலகம் தேவை. இப்படி ஒரு நீண்ட தேவைப் பட்டியல் கொடுத்தார்துணைவேந்தர்.

அவர் கூறியவற்றை முடித்துக் கொடுக்க முயன்றார்கள். கண்காட்சி நிதியைக் கல்லூரி அமைக்கும் செலவிற்கு முதுக்கினார்கள்.

கல்லூரி அமைப்புக் குழுவை நிறுவி, நன்கொடை திரட்டினார்கள். கூட்டு முயற்சி, மாடிக் கட்டடமாக எழுந்தது. தேவையான பொருள்கள் தாராளமாக வந்து நிரம்பின.

உரிய காலத்தில் பல்கலைக் கழகத்திற்கு மனு அனுப்பினார்கள்; வேண்டுகோள் பலித்தது; சேலம் நகரம் முதன் முதலாக முதல்நிலைக் கல்லூரியைப் பெற்றுச் சிறந்தது.

முதல்நிலைக் கல்லூரி உருவானபோது, நான் சேலத்தில் இருந்து, கண்டு மகிழும் பேறு பெற்றேன்.

பல்லாண்டுகளுக்குப் பிறகு, நகர் மன்றம் அக்கல்லூரியைச் சென்னை மாநில அரசிடம் ஒப்படைத்தது.

அதை அரசின் சார்பில், பொதுக்கல்வி இயக்குநராக இயங்கிய நான், நடத்தும் வாய்ப்புப் பெற்றேன். நினைக்காதது நடந்தது.

வழிபாடு மக்கள் மேம்பாட்டுக்காகவே

திரு இராமசாமி கவுண்டர், நாள் தவறாமல் பூசையில் திளைப்பார். பூசை செய்வதற்கு ஒரு மணி நேரம்போல் எடுத்துக் கொள்வார்.

பெரியார் ஈ.வெ.ரா.வின் கட்சியினர் என்று கருதப்பட்ட முதல்வர் அப்படிப் பூசையில் திளைப்பதைப் பற்றிப் பலர் வியப்பில் ஆம்வதுண்டு.

திரு இராமசாமி கவுண்டர் சேலத்தில் இருந்த ஆபீசர்ஸ் கிளப்"பில் முத்த உறுப்பினர்; சீட்டாட்டத்தில் கெட்டிக்காரர்; எல்லோருடனும் கலகலப்பாகப் பழகக் கூடியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/139&oldid=623031" இலிருந்து மீள்விக்கப்பட்டது