பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,ெ து. சுந்தரவடிவேலு 145

முந்திய முறை நடந்தது என்ன? ‘என் பதில்கள் முதல் தரமாகவே இருந்ததாக, என் மொழி அறிவைச் சோதிக்க அழைக்கப்பட்ட திரு. இராமசாமி நாயுடு கூறினாராம். திரு. அனந்தாச்சாரி ஒப்புக்கொண்டார்.

‘முதல் வகுப்பு மதிப்பெண் தரலாம் என்று இராமசாமி சொல்ல, த்ெதேர்வில், வகுப்பு முறை கிடையாது; எனவே, வெற்றிக்கு வேண்டிய அளவு மட்டுமே போடுவோம்’ என்று அனந்தாச்சாரி சொல்ல, இராமசாமி நாயுடுவும் அப்படியே செய்தார்.

பிந்தியவர், அதற்கு இரு எண்கள் குறைத்துப் போட்டு விட்டார்; அது நாயுடுவிற்குத் தெரியாது.

முதன் முறை ஏமாறி, எனக்குத் தீங்கு ஏற்படும்படி ஆகிவிட்டதை

உணர்ந்த இராமசாமி நாயுடு இந்த முறை விழிப்பாய் இருந்து எனக்கு உரிய வெற்றியை வழங்கினார்.

மாச்சியப்பரின் வழி

அக்கால ஆங்கில ஆட்சி, பள்ளிகளை - அவற்றிலும் உயர்நிலைப் பள்ளிகளைக் கொடுப்பதில் கஞ்சத்தனமாக நடந்து கொண்டது. மாவட்ட ஆட்சிக் குழுவின் பற்றாக்குறை நிதி நிலைமையைச் சாக்காக்கி, ஆண்டிற்கு இரண்டொரு உயர்நிலைப் பள்ளிகளைக் கூடத் நிறப்பதற்கு விடுவதில்லை.

இத் தடுப்பை உடைக்க விரும்பினார், திரு நாச்சியப்பர். அதற்கு ஒரு வழியும் கண்டு பிடித்தார்.

என்ன வழி? உயர்நிலைப் பள்ளிக்கூடம் வேண்டும் என்று கேட்கும் ஊரார் விதிமுறைக்கும் மேலாக, பத்து ஏக்கர் அடிமனை நிலம் தர வேண்டும். அதோடு, அலுவலகம், தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுக்கான அறைகள், வகுப்பிற்கு ஒர் அறை, அவற்றிற்கான தளவாடங்கள், மூன்றாண்டு நிகர செலவிற்காக, அய்யாயிரம் ரூபாய்கள் ஆகியவற்றை மாவட்டக் குழுவிற்கு முன்னதாகவே தரவேண்டும்.

அவற்றைக் காட்டி, மாவட்டக் குழுவின் தலைவர், ஆட்சியை நெருக்கி, உயர் நிலைப் பள்ளியைப் பெற்றுத் தரமுடியும்.

துெ நாச்சியப்பரின் வழி.

பல பள்ளிக்கூட நிகழ்ச்சிகளின் போது, மேற்கூறிய வழியை ஆதரித்து நான் தீவிரமாகப் பேசினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/161&oldid=623056" இலிருந்து மீள்விக்கப்பட்டது