பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வி, து. சுந்தரவடிவேலு 163

அத்தகையோருக்கே முன் உரிமை கொடுப்பதில், முனைப்பாய் இருந்ததால் பலமுறை வேண்டியவர்களின் எரிச்சலுக்கு ஆளானேன்.

சென்ற சில ஆண்டுகளாக, நான் முழுக்க முழுக்கப் பொதுச் சொத்தாகி விட்டேன்.

வேண்டியவர்கள் சிறப்பு பெறும்போது, மகிழ்ச்சியில் திளைக்கும் பொது, உடன் இருந்து அவற்றைக் கண்டு பூரித்து, 1)ளமையோடிருக்கும் வாய்ப்பினை விரைந்து இழந்து வருகிறேன்.

புத்தனேரியாரின் மணிவிழா அன்று, நான் நீண்ட பயணத்தில் ருெந்தேன்.

யைாவில் இஸ்கஸ் மாநாடு

இருப்புப் பாதை வழியே சென்னையிலிருந்து, பீகார் ாநிலத்திலுள்ள கயாவிற்குச் சென்று கொண்டிருந்தேன்.

புண்ணியம்தேடியா? இல்லை! பதவி நாடியா? இல்லை. புகழை நாடி யா? இல்லை! பின் எதற்கு?

கயாவில் மூன்று நாள்கள் நடைபெற்ற இந்திய சோவியத் பண்பாட்டுக் கழகத்தின் அனைத்து இந்திய மாநாட்டில் பங்கு பெறுவதற்காக, அந்த நீண்ட பயணத்தை மேற்கொண்டேன்.

அனைத்து இந்திய ‘இஸ்கஸ் குழுவின் மூத்த துணைத் அவர்களில் ஒருவனாகிய நான், போகாமல் இருப்பது முறையல்ல பதால், வீட்டுக்குத் துணையாய் இருந்து தெம்பூட்ட வேண்டிய காலகட்டத்தில், இரண்டாயிரத்து முந்நூறு கிலோ மீட்டர்கள் கொலைவு பயணம் செய்த, என் அப்பாவித்தனத்தை எவரே புரிந்து கொள்வர்?

மாஸ்கோ சென்றேன்

கயாவிலிருந்து திரும்பி வந்த ஒன்பதாம் நாள் அதைவிடத் கொலைவிலுள்ள சோவியத்தின் தலைநகரான மாஸ்கோவிற்குப் புரப்பட்டுச் செல்ல நேர்ந்தது.

| பாட முடியாத என் வாழ்க்கைத் துணைவியை ஏங்க விட்டு , அனைத்துலக அமைதி மாநாட்டிற்குப் போன என்னை, எவரும் ப’ வார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை.

பழய செய்தியொன்று என் நினைவிற்கு வருகிறது. 1975 ஆம் ஆண் , நான் துணைவேந்தர் பதவியில் இருந்து விலகிய சில ாங்களுக்குப் பிறகு, உலக அமைதிக் குழுவின் தலைவர், திரு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/179&oldid=623075" இலிருந்து மீள்விக்கப்பட்டது