பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. ' சுந்த ர பெ டிவேலு 171

மேலே கண்ட தன்மைகளை நீதியாகக் கொண்ட அரசியல் சட்டங்களையும் மாற்றி அமைக்க வேண்டும் என்று இம் மாநாடு lர்மானிக்கிறது.

மேற்கூறியவை பழைய முடிவுகளை உறுதிப்படுத்துவதே ஆகும்.

பின்வரும் தீர்மானத்தை அறிஞர் அண்ணா முன்மொழிய, மாநாடு வற்றுக்கொண்ட முடிவோ புதிது; மிகவும் துணிச்சலானது.

‘நம் சமுதாயத்தின் எதிர்கால நலனைக் கோரியும், நம் கட்சியின் தன்மானத்தைக் கருதியும், நமது கட்சியின் பேரால் இதுவரை நமக்கும் சர்க்காருக்கும் இருந்துவரும் போக்கை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டிய நிலைமைக்கு நாம் கொண்டு போகப்பட்டு விட்டோம்.

பட்டம் பதவி துறப்பீர்

‘இந்திய அரசியல் சமூக இயல் சம்பந்தமான பேச்சு வார்த்தைகளில் சர்க்கார் நம் கட்சியையும் நம் இலட்சியமாகிய திராவிட நாட்டுப் பிரிவினையையும் அலட்சியம் செய்து வருகிறார்கள்.

‘நம் கட்சியில் இருக்கும் அங்கத்தினர்களும் இனியும் வந்துசேர டிருக்கும் அங்கத்தினர்களும் சர்க்காரால் மக்களுக்கு அளிக்கப்பட்ட வந்த விதமான கவுரவப் பட்டங்களையும் உடனே சர்க்காருக்கு வாபஸ் செய்துவிட வேண்டும். இனி ஏற்றுக் கொள்ளவும் கூடாது.

‘அதுபோலவே, அவர்கள் யுத்தத்திற்காகவும் மற்றும் சர்க்கார் காரியங்களுக்காகவும் மத்திய சர்க்காராலோ, மாகாண சர்க்காராலோ ாந்த விதமான கமிட்டியில் எப்படிப்பட்ட கவுரவ ஸ்தானம், அங்கத்தினர் பதவி, ஆலோசகர் பதவி அளிக்கப்பட்டிருந்தாலும் அவைகளை எல்லாம் உடனே இராஜினாமா செய்து விடவேண்டும்.

தேர்தல் அல்லாமல், ஸ்தல ஸ்தாபனம் - அதாவது ஜில்லா போர்டு, பஞ்சாயத்து போர்டு ஆகியவற்றில் தலைவர், உப தலைவர், அங்கத்தினர் ஆகிய சர்க்கார் நியமனம் பெற்றோ, அல்லது நியமனம் பெற்ற அங்கத்தினர்களால் தேர்தல் பெற்றோ இருக்கிறவர்கள் எவரும் தங்கள் தங்கள் பதவிகளை உடனே இராஜினாமா செய்து விட வெண்டும்.

‘சர்க்காரால் தொகுதி வகுக்கப்பட்ட எந்த விதமான தேர்தலுக்கும் _சி அங்கத்தினர்கள் நிற்கக்கூடாது.

‘இதை ஏற்று ஒரு வாரத்தில் இதன்படி கட்டுப்பட்டு நடக்காதவர்கள் ாவரும், தங்களுக்கு இக் கட்சியில் இருக்க இஷடமில்லை என்று கருதி _சியை விட்டு நீங்கிக் கொண்டவர்களாகக் கருதப் படவேண்டிய

வரிகள் ஆவார்கள். ‘

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/187&oldid=623084" இலிருந்து மீள்விக்கப்பட்டது