பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O6 நினைவு அலைகள்

அதற்கு வேராக இருந்த திரு. கார்மேகக் கோனார் என்பால் அன் பொழியத் தொடங்கினார்.

திருக்குறளில் அருமை பெருமைகளைக் கற்றோரும் உணராது. உரைக்காது இருந்த காலத்தில் அதைப் பற்றிப் பேசவும் அதற்கான தகுதியைக் காப்பாற்றிக் கொள்ளும் பொருட்டு, குறள் நெறியைப் பின்பற்றவும் எனக்கு வாய்ப்புக் கிட்டியது.

கல்வி நிலையங்களில் பாரதியையும் பாரதிதாசனையும் அறிமுகமாக்கும் வாய்ப்புகளை நிறையப் பெற்றேன்.

பாரதி-பாரதிதாசன் புகழ் பரப்பினேன்

தமிழாசிரியர்கள், திருவள்ளுவர் பற்றியோ, பாரதிதாசன் பற்றியே பேச அழைத்தார்கள். மற்றவர்கள் பாரதியைப் பற்றிப் பேச அழைத்தார்கள். மூன்று கவிஞர்களுமே என்னை இயக்கிக்கொண்டிருச் கிறார்கள்.

குறள் நெறி பரப்பினேன்.

மதுரையில், வடக்கு ஆடி வீதியில், திருவள்ளுவர் மன்றம் ஒன்று பல்லாண்டுகளாக நடைபெற்று வருகிறது.

நான் மதுரையில் அலுவல் பார்த்த போது, அம் மன்றத்தின் செயலாளர் திரு. பழனியப்பன் அவர்கள். அவர், இன்றைய தமிழ்நாடு காமராஜ் காங்கிரசு கட்சியின் தலைவரான திரு. நெடுமாறன் அவர்களுடைய அருமைத் தந்தையாவார்.

அவர் என்னை ஒர் ஆண்டுவிழாவிற்கு அழைத்தார்; திருக்குறள் பற்றி உரையாற்ற வைத்தார்.

அதே விழாவில், சாத்துார் வழக்குரைஞரும் தமிழ் அறிஞருமான திரு. கந்தசாமி முதலியார் அவர்களும் உரையாற்றினார்.

புலமை மிக்க அத்தகைய அறிஞர்களோடு அமர்ந்து திருக்குறளைப் பரப்பியதை, மதுரை உலகத்தமிழ் மாநாட்டின்போது ஆனந்த விகடன்’ நினைவுகூர்ந்து, குறள் பரப்பின நூற்றுவர் பட்டியலில் என்னையும் சேர்த்துக் குறிப்பு எழுதியது. அதை எண்ணி நெகிழ்வதோடு, குறள் வழி நடக்க இடையறாது முயல்கிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/222&oldid=623123" இலிருந்து மீள்விக்கப்பட்டது