பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 நினைவு அலைகள்

ஓரினமாக நின்று எழுந்து ஆதரித்ததும் வெற்றியைப் பெற்றுத்தருதல்: மீண்டும் 1971 இல் பாகிஸ்தான் இந்தியாவின்மேல் படை எடுத்தல்: இந்திய சோவியத் உடன்படிக்கை நமக்குக் கை கொடுத்தல்.

அமெரிக்க உதவி பாகிஸ்தானுக்கும் சோவியத் உதவி இந்தியாவுக்கும் விரைதல் - நம் மக்களும் படைகளும் காட்டிய நாட்டுப் பற்று, பொழிந்த ஆதரவு, செய்த தியாகம் ஆகியவை விரைவில் வெற்றியைக் கொண்டு வருதல்; அத்தனையும் என் மனக்கண் முன் விரைந்து ஓடுகின்றன.

அத்தனைக்கும் மேலாக, உயர்வாக, அதோ ஒர் பேருருவம் இந்தியாவின் விடுதலைக்காகத் தொடக்கத்தில் அரும்பெரும் தியாகங்கள் புரிந்த, வெண்தாடி வேந்தர் ஈ. வெ. ராமசாமியின் புன்முறுவல் ஈர்க்கிறது.

சாதாரண காலங்களில் பிரிவினை வாதியாகத் தோற்றமளித்த பெரியார், நம் இந்தியா போரில் சிக்கிக்கொண்ட ஒவ்வோர் முறையும் இந்திய அரசுக்கு ஆதரவு தந்தார்; வலிந்து தந்தார்.

தனிப்பட்ட முறையில் அல்லாது , திராவிடர் இயக்கத்தின் சார்பில் முழு ஆதரவையும் தந்தார்.

முதிர்ந்த அரசியல் வழக்காடி’ நாட்டுக்கு நெருக்கடி ஏற்படும்போது எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு வழி காட்டினார்.

அதை மறந்துவிட்டு, “மேய்ப்பன் இல்லாத ஆடுகளாக அலை கிறீர்களே! என்று கேட்பது போன்ற பெரியாரின் புன்முறுவலைக் காண்கிறேன்.

பெற்ற சுதந்திரத்திற்குக் கேடு நேர்ந்த போதெல்லாம் ஒன்றாகக்கூடி எதிர்த்து வெற்றிபெற்று, இன்றுவரை பேணிக் காக்கிறோம்; போதுமா, வரும் தலைமுறைகளும் காக்க, வேண்டுமே!

உயிரினும் இனிய சுதந்திரம் பொது மக்களுக்குப் பயன்பட்டதா: இல்லையா? பயன்பட்டது. -

தலைமுறை தலைமுறையாகப் பள்ளத்தில் வீழ்ந்து கிடப்போர் விழிபெற வழி என்ன? பதவி கொள்ள வழி என்ன? நாடாள வழி என்ன? கல்விப் பெருக்கு, அறிவுப் பெருக்கு, தெளிவுப் பெருக்கு. தொழில் பெருக்கு ஆகும்.

கல்வியில் இந்தியாவின் நிலை என்ன?

1947 இல் ஆங்கிலேயன் வெளியேறியபோது, தொடக்கப் பள்ளியும்

இல்லாத இந்தியச் சிற்றுார்கள் நூறாயிரம்போல் இருந்தன. இன்றோ, பள்ளியில்லா ஊர் இல்லை என்று பெருமையோடு உரைக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/238&oldid=623140" இலிருந்து மீள்விக்கப்பட்டது