பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 நினைவு அலைகள்

காந்தி கிராமப் பல்கலைக்கழகம்

டாக்டர் செளந்தரம் அம்மையார், சின்னாளப்பட்டிக்கு அருகின் தம்பித் தோட்டம் என்னும் இடத்தில், உயர் ஆதாரப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.

தொடங்குவதற்கு முன்பு என்னைக் கண்டு பேசி ஆலோசித்தார். அது இன்று ஆல்போல் தழைத்து, காந்திகிராமப் பல்கலைக் கழகமாக இயங்குகிறது. இடையில் பலமுறை அங்குச் சென்றுள்ளேன் அவற்றை எண்ணி எண்ணி மகிழ்கிறேன்.

தேசத் தந்தை மறைந்தார்

ஒரு நாள் மாலைப் பொழுது சாய்ந்த பிறகு, வெளியூர் சென்றிருந்த, நான், காரில் மதுரை நகருக்குள் நுழைந்தேன்.

தெருவெல்லாம் ஆங்காங்கே சோக மயமான கூட்டங்கள். வானொலியில் ஏதோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். கார் ஒடி . கொண்டிருந்ததால், செய்தி சரியாகக் கேட்கவில்லை.

வீட்டை அடைந்ததும் இடிபோன்ற செய்தியைக் கேட்டேன். தலை கிறுகிறுத்தது. அண்ணல் காந்தியார் சுட்டுக் கொல்லப்பட்டார்; கோட்சே என்ற இந்துவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

வழக்கம்போல, 30-1-48 மாலை காந்தியடிகளார், வழிபாட்டு. கூட்டத்திற்குச் சென்றார்.

தில்லியில் பிர்லா மாளிகைக்குள் கூடியிருந்தவர்கள் இடையே அண்ணல் காந்தியடிகள் நுழைந்தார்.

மக்களே போன்ற ஒருவர் கையெடுத்துக் கும்பிட்டார். அண்ணலும் வணங்கினார். மறுநொடி, கயவனின் குண்டு, அடிகளின் மார்பில் பாய்ந்தது ‘அரே ராம்!’ என்றபடியே மறைந்தார் காந்தி.

ஆம்; சத்தியம் சாய்ந்தது; சீலம் வீழ்ந்தது; தூய்மை மறைந்தது. நாட்டு நலம் ஆழ்ந்தது; வழிகாட்டும் பேராற்றல் சுக்கு நூறாயிற்று.

மக்கள் நலனுக்குச் சாவுமணி அடிக்கப்பட்டது.

காரிருள் சூழ்ந்தது; வெறி பின்னிக்கொண்டது; அவாக்கள் பற்றிக் கொண்டன; தணியாத பணத்தாசை வெடிக்கும் சமய வெறி, ஒயத, சாதிக் கலவரம், ஆகியன நாட்டை அலைக்கழிக்கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/266&oldid=623171" இலிருந்து மீள்விக்கப்பட்டது