பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 நினைவு அலைகள்

சில நாள்கள்வரை, நானும் என் மனைவி காந்தமும் சித்தம் கலங்கினோம்.

உணவும் உறக்கமும் கெட்டாலும் அலுவல் கெட முடியாதல்லவா? அலுவல் பற்றி வெளியூர் பயணம் புறப்பட்டோம். அண்ணலின் அஸ்தியை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கரைத்தார்கள்.

அப்படிக் கரைத்த நாளில், நாங்கள் பெரிய குளத்தில் தங்கி இருந்தோம். அஸ்தி ஊர்வலம் நாங்களிருந்த பயணிகளின் விடுதியைத் தாண்டி நகர்ந்தது. எங்களுக்கு இருப்புக் கொள்ளவில்லை.

விடுதியை விட்டு, வீதிக்கு வந்தோம். ஊர்வலத்தில் கலந்தோம்: நடந்தோம்; களைப்பையும் பொருட்படுத்தாது நடந்தோம்: அமைதியாக நடந்தோம். நெஞ்சம் வெடித்து விடும்போல் இருந்தது.

உரிய இடத்தை அடைந்தோம். சிலர் உரை நிகழ்த்தினர். எனக்கும் வாய்ப்புக் கிட்டியது. சில மணித்துளிகள், வாய் திறக்க இயலவில்லை. கண்ணிர் மல்க,

‘ஈராயிரம் ஆண்டுகளாக, என்பும் உரியர் பிறர்க்கு என்னும் குறள் வரிக்கு ஆள் தேடிற்று மானுடம்.

‘கடைசியாக, அண்ணல் காந்தியடிகளின் உருவில் அவரைக் கண்டோம்.

‘வாராமல் வந்த மாமணியை இழந்தோம்; எனினும் நாம் இருப்போம். எப்படி இருப்பது?

‘'காந்திய சத்திய நெறியில், அன்பு நெறியில், நாட்டுப்பற்று நெறியில், எல்லோரையும் வாழ்விக்கும் நெறியில் ஊன்றி நடப்போம் என்று நமக்கு நாமே வாக்குறுதி தந்து, அண்ணலுக்கு அஞ்சலி செலுத்துவோமாக’ என்று நான் பேசி முடித்தேன்.

காந்தி அடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட m “ “ எண்னற்றவர்களைப் பிடித்து உலுக்கியது. -

எளிய மக்களை உலுக்கியது; அதைப் போன்றே தலைவர்களை உலுக்கியது; தந்தை பெரியாரை உலுக்கியது.

காந்தி அடிகளாரும் பெரியாரும்

காந்தியடிகளின் தெளிவான, தன்னலமற்ற, நாட்டுத் தொண்டாலும் தீண்டாமை ஒழிப்பு முயற்சியாலும் கவரப்பட்டு, நாட்டுத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/268&oldid=623173" இலிருந்து மீள்விக்கப்பட்டது