பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 273

குஞ்சிதம் குருசாமி புண்பட்டார்

நான் சென்னை மாநகராட்சி அலுவலுக்கு வந்தபோது, என் மனைவியின் அக்காள், திருமதி. குஞ்சிதம் குருசாமி, மாநகராட்சி கல்வித்துறையில், பெண்கள் பள்ளி மேற்பார்வையாளராக வேலை

பார்த்து வந்தார்.

அம்மையார் ஒருநாள் ஒர் ஆசிரியையை அழைத்துக்கொண்டு அலுவலகம் வந்தார். என் பேட்டியை விழைந்தார்.

இருவருக்கும் பேட்டி கொடுத்தேன்; கோரிக்கையைக் கேட்டுக் குறித்துக் கொண்டேன்.

இருவரும் விடைபெற்றுக் கொள்ளும் வேளை, ‘இனிமேல், எவர் உதவி கோருகிறாரோ அவரை நேரே அனுப்பி வையுங்கள்; இட்டுக் கொண்டு வருவதை நான் விரும்பவில்லை’ என்று அழுத்தமாகக் கூறி அனுப்பினேன்.

திருமதி. குஞ்சிதம் அம்மையார் அப்போது புகழ்பெற்ற பேச்சாளர். தன்மான இயக்கத்தின் மாநாடுகளில் தலைமை தாங்கியவர். பெரியார் இயக்கத்தவரின் மதிப்பிற்கு உரியவர். என்னிலும் மூத்தவர். - அப்படிப்பட்டவரின் மனம் வெகுவாகப் புண்பட்டது. அப்புண் ஆறி, என்னோடு பேச, பல திங்கள் பிடித்தன. ஆனால், அந்தச் செய்தி ஆசிரியர் சமுதாயத்தில் பரவிவிட்டது. ஒரு வகையில் அது எனக்கு உதவி ஆகிவிட்டது.

எனக்கு வரும் பரிந்துரைகள் இரண்டொரு திங்களோடு நின்று விட்டன.

ஆனால் தகவல்களுக்குக் காது கொடுப்பேன்; உரியவரே நேரில் கோரும்போது, பொறுமையாகக் கேட்டுக் கொள்வேன்.

அதனால் நிகழ்ச்சிகள் உடனுக்குடன் எனக்குத் தெரியவந்தன.

36 . விடுதலை விழா கொண்டாடப்பட்டது

மாநகராட்சிப் பள்ளிகளில் துப்புரவு பெருகியது

மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பு - பள்வித் தணிக்கையாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/289&oldid=623204" இலிருந்து மீள்விக்கப்பட்டது