பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/291

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_து. சுந்தரவடிவேலு 275

முதலில் பார்வை இடும்போது, இவற்றில் எதையாவது கண்டு, கட்டிக்காட்டிவிட்டு வந்தால், அடுத்த பார்வையின்போது அவை நீக்கப்பட்டிருக்கும்.

நாம் உயர்ந்தது

சில திங்களுக்குள் பல மாநகராட்சிப் பள்ளிகள்துப்புரவில் வளர்ந்து விட்டன; ஒழுங்கில் முன்னேறின; திறமையில் ஒளி விட்டன.

இட வசதியும் நீர் வசதியும் இருந்த பள்ளிகள் சில, நல்ல தொட்டங்கள் போட்டு வளர்த்துக் காப்பாற்றின; அழகுத் தோட்டங்கள் அமைத்ததோடு, காய்கறித் தோட்டங்களும் போட்டன.

அந்தத் தோட்டங்கள் பள்ளிச்சூழலை குளிர்வித்ததோடு இயற்கைப் பாடங்கள் கற்பிக்கும் துணைக் கருவிகளாகவும் பயன்பட்டன.

வன்னிய தேனாம்பேட்டை மாநகராட்சி ஆண்கள் பள்ளி, மயிலை காரணிஸ்வரர் கோவில் பள்ளி முதலியன தோட்டங்களுக்குப் பெயர் பெற்றன.

பழுதடைந்த தளவாடங்கள்

இட நெருக்கடி மிகுந்த நகராட்சிப் பள்ளிகளில் பெரும்பாலான வற்றில், இரண்டொரு அறைகள் உடைந்த மரச்சாமான்களைப் போட்டு வைக்கத் தேவைப்பட்டன.

அவ் வகுப்புப் பிள்ளைகள் பலவேளை குறுகிய தாழ்வாரங்களில், சிலபோது, திறந்த வெளியில் உட்கார்ந்து படிக்க முயன்றார்கள்.

ஒரு பள்ளியில் மரப்பொருள் எதுவும் உடைந்தால், அருகில் உள்ள தச்சரைக் கூப்பிட்டுக் கூலி கொடுத்து, தலைமை ஆசிரியரே பழுது பார்த்துக் கொள்ளும் உரிமை இல்லை.

மாநகராட்சியின் எல்லாத் துறைகளின் மரப் பொருள்களையும் பழுது பார்க்க, மூன்று மையப் பட்டறைகள் சென்னை நகரில் இருந்தன.

ஒவ்வொரு பட்டறைக்கு இன்னின்ன வட்டங்கள் என்று வரையறுக்கப்பட்டு இருந்தது.

என்ன பொருள்கள், எத்தனை பொருள்கள் பழுதாகி விட்டன என்று தலைமையாசிரியர் பட்டறைக்குத் தகவல் கொடுக்க வேண்டும்.

அப்பட்டறையில் இருந்து, ஆயத்தமாயிருக்கிறோமென்று அறிவிப்பு வந்த பின்னர் பழுதான பொருளை அங்கு அனுப்பி வைக்க வேண்டும். பட்டறைக்குப் போன பிறகும் பல திங்கள் தேங்கிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/291&oldid=623207" இலிருந்து மீள்விக்கப்பட்டது