பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

து சுந்தரவடிவேலு 277

விடுமுறையில் வெள்ளையடித்தல்

அதோடு

பள்ளிகள் திறந்த பிறகே வெள்ளை அடிக்கும் பழக்கம் இருக்கிறது. அதனால், இடையில் இரண்டொரு திங்கள் படிப்புக்

கெட்டுப்போகிறது. விடுமுறைகளின்போதே, வெள்ளையடிக்க வறிபாடு செய்துவிட்டால், பெரிய நன்மையாக இருக்கும். உங்களுக்குப் பெரிய புகழாக இருக்கும் ‘ என்று மறைமுகமாக ஆலோசனை கூறினார். அதை அறைகூவலாக ஏற்றுக்கொண்டேன்.

மாநகராட்சியின் பொதுப்பணித் துறையை அணுகினேன். அத் துறையின் பெரிய அலுவலர்கள் உதவினார்கள்.

ஒவ்வோர் பள்ளிக்குமான திட்ட மதிப்பீடு, 1946 மார்ச் 31க்குள் வந்தது.

உடனுக்குடன் ஒப்புதல் கையெழுத்திட்டு அனுப்பினேன். ஏப்ரல் திங்களில் பள்ளிகளை மூடும்போதே பழுது பார்க்கும் வெள்ளை அடிக்கும் வேலை தொடங்கிவிட்டது; பெரும்பாலான வற்றில் விடுமுறை முடிவதற்குள் வேலை முடிந்துவிட்டது.

அடுத்த 1950களிலும் அப்படியே செய்ய முடிந்தது. அதற்குத் துணை புரிந்தவர்கள் பலர். தலைமைப் பொறியர்கள், கே.கே. நம்பியார், மீரான் ஆகியோர் களைப் போன்றே அப்போது துணைப் பொறியாளர்களாக இருந்த

கோவிந்தராசு, வரதராசு, கிருஷ்ணன், ராகவன் ஆகியோர்களை நினைந்து நன்றி சொல்ல வேண்டும்.

விப்டு முறையை அறிமுகப்படுத்தினேன்

இப்படிப் பள்ளிகளைப் பார்வையிடுகையில், கசப்பான தகவல் ஒன்று கிடைத்தது. அது என்ன?

சில மாநகராட்சிப் பள்ளிகளில், இடம் இன்மை பற்றி முந்திய ஆண்டில் பல பிள்ளைகளைச் சேர்க்க மறுத்துவிட்டார்கள் என்பதாம்.

தொடக்கக் கல்விக்குக்கூட இடங்கொடுக்க இயலாத நம் சமுதாயத் தின்மேல் கொதிப்புக் கொண்டேன்.

கொதிப்பு அடங்கியபோது வழி பிறந்தது.

அது என்ன?

அரசு ஆணை ஒன்று நினைவுக்கு வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/293&oldid=623209" இலிருந்து மீள்விக்கப்பட்டது