பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு து சுந்தரவடிவேலு 279

கூடுதல் ஆசிரியர்கள் உடனுக்குடன் கிடைக்காமற் போனால் சமாளிக்க முடியாத அளவு தொல்லையாகிவிடும் என்று தயங்கினார்கள்.

சேர்க்கை மிகமிக, கூடுதல் ஆசிரியர்களைத் தயக்கமின்றி நியமிப் பதாகச் சொன்னேன்.

எல்லோரையும் சேர்த்துக் கொள்ள உரிமை கொடுத்தனுப்பினேன்; தெம்போடு சென்றார்கள்.

வந்தவர்களை எல்லாம் உரிய வகுப்புகளில் சேர்த்தார்கள்.

விப்டுக்கு எதிரான முறையீடு

மூன்று நான்கு நாள்களில், துணை மேயரும் பல்லாண்டு காலம் மாநகராட்சி உறுப்பினரும் சென்னை தொழிற் சங்கத் துண்களில் ஒருவருமான திரு. பக்கிரிசாமி பிள்ளை என்னிடம் வந்தார். இரண்டு மூன்று தொழிற்சங்கச் செயல்வீரர்கள் உடன் வந்தார்கள்.

என் அறையில் அமர்ந்ததும், ‘உங்கள் குறையைக் கல்வி அலுவலரிடம் சொல்லுங்கள்’ என்றார்.

அவர்கள் குறைகளைக் கொட்டினார்கள். ‘நாங்கள் ஆலைத் தொழிலாளிகள். எங்கள் வீடுகளில் இருந்து இப்போதுதான் படிக்க வருகிறார்கள். இவர்கள் முழுநாள் படித்தாலும் படிப்பில் மற்றவர்கள்போல் தேறுவார்களா என்பது எங்கள் சந்தேகம். ‘அப்படியிருக்க, எங்கள் பள்ளியை அரை வேளை பள்ளியாக்கி விட்டீர்களாம். அய்ந்து மணி படித்தே முன்னுக்கு வராத எங்கள் பிள்ளைகள் நான்கு மணி நேரம் மட்டும் படிப்பதால் காலம் தான் பாழாகும் ‘உங்களிடம் எவ்வளவோ பெரிதாக எதிர்பார்த்திருந்தோம் நீங்களே இப்படி செய்து விட்டால் அப்புறம் எங்கள் பிள்ளைகளுக்கு ஏது எதிர்காலம்?’ என்று அங்கலாய்த்தார்கள்.

நான் வந்தவர்கள் பேசுகையில் குறுக்கிடவில்லை. பொறுமையாகக் கேட்ட பின் கீழ் வருவதை அவர்கள் வாயாலேயே வரவழைத்தேன்.

‘பழைய முறையில் பிள்ளைகள், வாரத்திற்கு 25 மனிகள் படித்தார்கள். ஷிப்டு முறையில் 24 மணிகள் படிக்கிறார்கள் அந்த ஒரு மணி நேரம் குறைப்பு விளையாட்டு வேலையைத்தான் குறைக்கிறது ‘அதே ஆசிரியர் இரண்டு ‘விப்டு பாடம் சொன்னால், களைத்துப் போவார்; பாடம் கெடும் ஒருவர் ஒரு ‘விப்டுக்கே வருவதால் சோர்வு ஏற்படாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/295&oldid=623211" இலிருந்து மீள்விக்கப்பட்டது