பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_து. சுந்தரவடிவேலு 281

-

அந்தச் சுப்பிரமணியம் பிள்ளை எந்தப் பள்ளி யின் தலைமையாசிரியர் என்பதையும் தெரிவித்தார்.

‘தகவலுக்கு நன்றி’ என்று கூறியதோடு பேச்சை முடித்துவிட்டேன்.

தொலைபேசியில் பேசியவரும் தான் யார் என்று சொல்லவில்லை; ாறும் கேட்கவில்லை.

விடுதலை விழா கொண்டாடினார்

அரைமணி பொறுத்திருந்தேன். பின்னர், அஞ்சல்களை வாங்கும் உதவியாளரை அழைத்தேன். அஞ்சல்களைக் கொண்டு வரச் செய்தேன்.

மேற்படி பள்ளிக்கூட உறை ஒன்று கட்டில் இருந்தது. அதை உடைத்துப் பார்த்தேன்.

தொலைபேசியில் கிடைத்த தகவல் சரியாக இருந்தது.

குறிப்பிட்ட பள்ளி, ரிப்பன் கட்டடத்திற்கு அருகில் இருந்தது. எனவே, மாலை எந்நேரமாக இருந்தாலும் என்னை வந்து கண்டுவிட்டு, விடு செல்லும் படி சுப் பிரமணியம் பிள்ளைக்குக் குறிப்பொன்று அனுப்பினேன். அப்படியே என்னை வந்து பார்த்தார்.

நாற்காலி கொடுத்து உட்காரச் சொன்னேன். ‘பரவாயில்லைங்க! நின்று பேசுவதே எங்கள் பழக்கம்’ என்றார்.

‘என்னுடைய பழக்கம் வேறு: ஆசிரியரை உட்கார வைத்தே பேசுவேன்’ என்றேன்.

‘உங்கள் சக ஆசிரியர்கள் ஒத்துன்ழக்கிறார்களா? என்றேன்.

“ஆம்” என்றார்.

‘தான் விரும்புகிறபடியே, கால அட்டவணை போட்டுத் தந்தால் மட்டுமே, பாடம் நடத்த முடியுமென்று எந்த ஆசிரியராவது எப்போதாவது அடம் பிடித்தது உண்டா?’

‘இல்லை; வேலை செய்கிற பத்துப்பேரும் ஆளுக்கொரு கால அட்டவணை கொடுத்தால் பள்ளிக்கூடத்தை எப்படி நடத்துவது? ‘ என்று கேள்வியாகப் பதில் அளித்தார்.

‘முடியாதுதான். ஒர் அமைப்பின் கீழ் இருப்பவர்களுக்கு அடிப்படையில் ஒருமைப்பாடு இருந்தாலும் விவரங்களில் எண்ணற்ற கருத்துகள் இருக்கலாம். ஒவ்வொருவரும் தம் கருத்தே ஏற்கப்பட வேண்டுமென்று அடம்பிடிப்பது ஒழுங்காகுமா?’ என்று கேட்டேன்.

ஆகாது’ என்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/297&oldid=623213" இலிருந்து மீள்விக்கப்பட்டது