பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 நினைவு அலைகள்

‘அப்படிக் கருத்து மாறுபட்டவர்கள், பெரும்பாலோரின் முடிவுக்கு, நடைமுறைக்குக் குறுக்கே புகுந்து தொல்லை கொடுக்கலாமா? இது என் கேள்வி.

‘ஆகாது’ என்பது தலைமையாசிரியரின் பதில்.

‘சரி நீங்கள் அடுத்த வாரத்தில் இரு நாள்களுக்கு விடுப்புக் கேட்டிருக்கிறீர்களே? அது எதற்கு?’ என்று அமைதியாகக் கேட்டேன்.

‘விடுப்புக் கேட்டிருப்பது உண்மை: காரணத்தை அம்மனுவில் குறிக்கவில்லை. ஆனால் உங்களிடம் ஒளிக்காமல் சொல்லுகிறேன்.

‘விடுதலை நாள் கொண்டாட்டத்தில் கலந்துகொள்ள விரும்பாத தால், விலகி நிற்பதாக, விடுப்பு எடுத்துக் கொள்ள இப்படிச் செய்தேன்’ என்றார்.

‘'நான் கருத்துரிமையை மதிப்பவன். எனக்கு மாறான கருத்து கொண்டிருப்பதால், என்னால் உங்களுக்கு எவ்விதத் தொல்லையும் வராது. நீங்களும் கட்டுப்பாட்டை மதித்து நடத்தலே முறை.

‘'நாடு விடுதலை அடைந்துவிட்டதாக மகிழ்கிறது. அதைக் கொண்டாட முடிவு செய்துள்ளது நாட்டின் முடிவு, அரசு ஆணையாக வந்துள்ளது. நீங்கள் அதை மதித்துக் கட்டுப்படாவிட்டால், நாளை ஒவ்வொரு உதவி ஆசிரியரும் தமது கருத்தே கொடிகட்டிப் பறக்கவேண்டும் என்று கலவரம் செய்யக்கூடும்.

‘மாணாக்கரும் கருத்துரிமை என்ற சாக்கில், பள்ளி நடை முறைக்கும், பாட நடப்புக்கும் ஒத்துப்போக மறுக்கலாம் அல்லவா? இதுவே என் கவலை. ‘

‘மன்னியுங்கள் அய்யா, விடுப்பு தேவை இல்லை’ என்று எழுதிக் கொடுத்துவிடுகிறேன். விடுதலை நாள் விழாவைப் பள்ளியில் உரிய முறையில் கொண்டாடுகிறேன்’ என்றார் திரு. சுப்பிரமணியம் பிள்ளை.

அப்படியே சிறப்பாகச் செய்தார்.

சுதந்திர தின விழாவிற்கு முன்னரே, மேற்படி பேட்டி பற்றி ஊர் முழுவதும் பேச்சாகிவிட்டது.

அது நல்லதாகிவிட்டது.

எல்லா மாநகராட்சிப் பள்ளிகளிலும் விடுதலை விழா மிக மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/298&oldid=623214" இலிருந்து மீள்விக்கப்பட்டது