பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

**. w 0 வேலு 287

மயிலாப்பூரில் இருந்து புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த, |திரு.வி.சி. கோபாலரத்னம் என்னும் வழக்கறிஞர்; மரியாதைக்குரிய பெரிய அய்யங்கார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

அப்படி அவர் பாராட்டி முடிப்பதற்குள், மேயரின் பக்கத்தில் விற்றிருந்த ஆணையர், மேயரிடம் சொல்லி என்னைப் பெயர் சொல்லி அழைக்க வைத்தார்.

நான் எழுந்து நின்று, அவைக்கு வணக்கம் கூறினேன். உறுப்பினர்கள் கையொலி எழுப்பிப் போற்றியது இன்றும் உயிருட்டுகிறது.

சென்னை மாநகராட்சி, பல படிப்பகங்களைத் தன் சொந்த செலவில் சிறப்பாக நடத்தி வந்தது.

அவற்றில் சிலவற்றிற்கு இடவசதி தாராளமாக இருந்தது. அங்கு வந்து படிப்போர் எண்ணிக்கையும் கணிசமாக இருந்தது.

மதுலகங்கள் தொடங்கல்

பெரிய படிப்பகங்களை நூலகங்களாகவும் மாற்றி நடத்திப் பார்க்கும் யோசனை பிறந்தது.

ஒரு இருபது படிப்பகங்களைத் தேர்ந்தெடுத்தோம். ஒன்றிரண்டு தவிர மற்றவை, தமிழ்ப் படிப்பகங்கள். தெலுங்கர் வாழ்ந்த பகுதியில் தெலுங்கு இதழ்களும், உருது பேசுவோர் பகுதியில் உருது இதழ்களும் வந்து கொண்டிருந்தன.

படிப்பகம் ஒவ்வொன்றிற்கும் நூல்கள் வாங்க, இரு நூறு ரூபாய்கள் போல் கொடுக்கப்பட்டது.

சாதாரண மக்கள் படிக்கக்கூடிய நூல்களின் பட்டியலை ஆயத்தம் செய்யும் பொறுப்பை ஆணையர் என்னிடம் விட்டுவிட்டார்.

நூல் பட்டியல் போட்டேன்.

வ.உ.சி. நூல்களை வாங்கினேன்

அதில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனார் மொழி பெயர்த்த சில நூல்களையும் சேர்த்தேன்.

ஜேம்ஸ் ஆலன் என்பவர் ஆங்கில தத்துவ ஞானி. அவருடைய நூல்கள் சிறந்தவை. “வலிமைக்கு மார்க்கம் ‘சாந்திக்கு மார்க்கம் ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/303&oldid=623221" இலிருந்து மீள்விக்கப்பட்டது