பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 நினைவு அலைகள்

செயல் புரியவேண்டும்; பல பகுதிகளிலும் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும்.

விடுதலை பெற்றதும் பொங்கிய கிளர்ச்சிகள்

ஒரு பக்கம் வரலாற்றின் இந்த இணைப்புச் சாதனையொன்று நிகழ வேறு பக்கத்தில் - இல்லை பக்கங்களில் - நாடு பல கொந்தளிப்புகளைச் சமாளித்தது.

பல குழந்தைகளைப் பெற்றெடுத்த குடும்பத்தைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். தந்தை, அத்தனை பேர்களையும் செல்லம் கொடுத்து வளர்த்ததாக நினைத்துக்கொள்ளுங்கள்.

அருமைத் தந்தை பல நாள் வெளியூர் சென்றுவிட்டு, வீடு திரும்பும் போது அக் குடும்பத்தின் சூழல் எப்படி இருக்கும் என்று ஊகித்துப் பாருங்கள்.

ஆளுக்கொரு புகார்; ஒவ்வொருவரிடமும் பல கோரிக்கைகள்; அத்தனை பேரும் தந்தையைச் சூழ்ந்துகொண்டு சொல்லத் துடித்தல்.

இப்படி இரைச்சலும் கூச்சலுமாகச் சிறிது நேரம் இருந்தே தீரும். ஒரு நாட்டின் ஆயுளில் நூற்றாண்டுகள்கூட சிறுபோதே! = இருநூறு ஆண்டுகள் நம்மை ஆண்ட ஆங்கிலேயர் வழிவழியான இந்தப் பழைய அநீதிகளை அப்படியே விட்டு விட்டு வெளி யேறினார்கள்.

அவர்கள் ஆட்சிக் காலத்திலும் பெருகிய வறுமையும் வறட்சியும் இரண்டொரு ஆண்டுகளில் குறைந்து விடுமா?

உரிமை இழந்து கிடந்தபோது, நம் மக்கள் உரிமை பெற, நல்வாழ்வு பெறத் துடித்தார்கள்.

உரிமை இழந்த, உடைமை ஏதுமற்ற, அநீதிகளுக்கு ஆளான பல்வேறு பிரிவினர்களும் இந்தியா விடுதலை பெற்ற சூட்டோடு தங்கள் தங்கள் கோரிக்கைகளை அரசின் முன் வைத்தார்கள். முறையீடுகள் பெருகின; அணி வகுப்புகள் வளர்ந்தன; நீண்டன: கிளர்ச்சிகள் வெடித்தன; போராட்டங்கள் பெருகின.

ஆயுதமேந்தும் போராட்டத்தின் வழியாக, சமதர்ம வாழ்க்கை முறையைக் கொண்டு வரும் பலாத்கார நடவடிக்கைகளும் தெலுங்கானா பகுதியில் மேற்கொள்ளப்பட்டன.

தன்னாட்சி இந்தியாவில், எடுத்த எடுப்பிலேயே வெள்ளம் போலக் கிளர்ச்சிகள் பெருகவும், அடக்குமுறைகள் கடுமையாயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/308&oldid=623226" இலிருந்து மீள்விக்கப்பட்டது