பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_து கந்தரவடி வேலு 293

இந்திய பொது உடைமைக் கட்சி தடை செய்யப்பட்டது. சிறைப்பட்டோர் ஏராளம்: தலைமறைவானோர் பலர் ஆவார்.

அவர்களில் சிலருடைய தலைக்குப் பெரும் விலை அறிவிக்கப் பட்டது.

பல்லாயிரக்கணக்கான பொது உடைமைக் கட்சியினர் சிறைப் படுத்தப்பட்டார்கள். சென்னை மாகாணத்தில் சேலம், வேலூர், கடலூர் சிறைகளில் அரசியல் கைதிகள் துப்பாக்கிச் சூடுகளுக்குப் பலியாக நேர்ந்தது. இத் துயரச் செய்தி மக்களை உலுக்கியது.

இந்தியப் பொது உடைமைக் கட்சி 1951 ஆம் ஆண்டில் போராட்ட வழிக்குப் பதில், பாராளுமன்ற முறைக்கு மாறுவது என்று முடிவு செய்தது.

அதன் பின்னர், அடக்குமுறை தளர்ந்தது: அமைதி திரும்பியது.

தமிழ் நாட்டில் காங்கிரசுக்கு எதிர்ப்பு

பொது மக்கள் தமிழ் மாநில ஆட்சியின்மேல் கொண்டிருந்த பெரும் கோபம், 1952 இன் தொடக்கத்தில் வந்த பொதுத் தேர்தலில் வெளிப்பட்டது. தேர்தலில் சென்னை மாகாணத்தில், காங்கிரசு கட்சி பெரும்பான்மை பெறத் தவறிவிட்டது. 375 உறுப்பினர்களைக் கொண்ட சட்ட மன்றத்தில் காங்கிரசுக் கட்சி 152 இடங்களைப் பிடித்தது. பொது உடைமைக் கட்சி உறுப்பினர்கள் 62 பேர் தேர்ந்து எடுக்கப்பட்டார்கள்.

பொதுவாகச் சென்னை மாகாண பொது மக்களும், சிறப்பாகத் தமிழர்களும் காங்கிரசிற்கு எதிராக மாறியதற்கு மற்றோர் காரணமும் உண்டு.

அது என்ன?

கட்டாய இந்தி பாடமுறை ஆகும்.

இராசகோபாலாச்சாரியார் 1938 இல் கொண்டு வந்த கட்டாய இந்தி பாடத்திட்டம் - 1940 இல் அமைச்சர்களுக்குப் பதில் ஆலோசகர்கள் ஆளும் நிலை ஏற்பட்ட கட்டாய இந்திப் பாடமுறை 1948 இல் மீண்டும் புகுத்தப்பட்டது.

இரண்டாம் முறை, சிறு மாற்றத்தோடு நுழைக்கப்பட்டது.

என்ன மாற்றம்?

இராசாசி, ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை இந்தி பாடத்தைக் கட்டாயமாக்கினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/309&oldid=623227" இலிருந்து மீள்விக்கப்பட்டது