பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294 நினைவு அலைகள்

ஓமந்துார் இராமசாமி ரெட்டியார் அமைச்சரவை, அதே இந்தியை ஏழாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்புவரை கட்டாயப்படுத்தியது. ஆங்கிலம் கற்பிப்பதையும் பழையபடி ஆறாம் வகுப்பில் தொடங்காமல், ஏழாம் வகுப்பில் தொடங்குபடி ஆணையிட்டது.

அதன் பொருள் என்ன? ஒரே வகுப்பில் இரு புது மொழிகளைக் கற்கத் தொடங்கும் தொல்லை நீடித்தது. -

இரு மொழிகளில் ஒன்றில் தவறினாலும் படிப்பு தடைப்படும், தேர்ச்சியை இழக்க நேரிடும் என்பது தொடர்ந்தது.

இம் மாற்றம் எவ் வகையிலும் உதவிகரமானதாக இல்லை. எனவே, தமிழகத்தில் மீண்டும் இந்தி எதிர்ப்புப் போர் நடந்தது; கசப்பும் வெறுப்பும் வளர்ந்தது.

பிஞ்சுப் பருவத்தில் இந்திப் பாடத்தைச் சுமத்தி, அதில் போதிய மதிப்பு எண்கள் பெற்றால்தான் மேல் வகுப்பிற்குப் போகலாம் என்று

==

இராசாசி ஆணையிட்டதும் பலிக்கவில்லை.

ஒமந்துர் ஆணையிட்டதும் பலிக்கவில்லை. விவகாரம் எப்படி முடிந்தது?

இராசாசி ஒரு காரணத்திற்காகப் பதவியைத் துறந்ததுபோல் ஓமந்துாராரும் வேறொரு காரணத்திற்காகப் பதவி துறந்தார்.

அவருக்குப் பின், திரு. பி. எஸ். குமாரசாமி ராஜா முதலமைச்சரானார். அந்த அமைச்சரவை சற்று விட்டுக் கொடுத்துச் செயல்பட்டது.

ஒவ்வோர் உயர்நிலைப் பள்ளியிலும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்புவரை இந்தி கற்றுக்கொடுக்க ஏற்பாடு இருக்க வேண்டும்.

விரும்புகிறவர்கள், இந்தி படிக்கட்டும்; விரும்பாதவர்கள், ஏதாவதொரு பள்ளிக்கூட நடவடிக்கைகளில் கூடுதலாக ஈடுபடட்டும்.

இது மூன்றாவதாக வந்த இந்தித் திட்டம். இதன் பொருள் என்ன?

விளையாட்டுகளில் ஆர்வமுடையவர்கள் இருந்தால், அவர்கள் இந்திக்குப் பதில் அவ்வகுப்பு நேரங்களில் விளையாட்டில் ஈடுபடலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/310&oldid=623229" இலிருந்து மீள்விக்கப்பட்டது