பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

295 நினைவு அலைகள்

அவர் சிரித்தபடியே, நல்ல செய்தி ஒன்றைக் கூறினார்.

அதைக் கூறுவதற்கு முன்பு என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

அது என்ன?

‘உனக்குப் பதவி உயர்வு கிடைத்தாலும் இன்னும் பல திங்கள் எண்பத்து ஐந்து நகராட்சி உறுப்பினர்களுக்கு ‘சலாம்’ போட உன் மனம் ஒப்புவாயா?’ என்று கேட்டார்.

‘அவர்களுக்கு வணக்கம் சொல்ல நான் என்றும் தயங்கியதில்லை. இனியும் தயங்க மாட்டேன்’ என்றேன்.

i

‘பல திங்களுக்கு முன்பே, மண்டல ஆய்வாளர் பதவி காலியாவதாக இருந்தது. பதவி உயர்விற்குக் காத்துக் கொண்டிருப்பவர்களில், நீதான் முதல் இடத்தில் இருக்கிறாய். எனவே, நீயே மண்டல ஆய்வாளராக வேண்டும்.

‘அதற்கான பரிந்துரை அனுப்பும் வேளை, அமைச்சர் மாதவ மேனன் தலையிட்டார். அவரோடு படித்த திரு.கே. பி.ஜி. மேனனின் பதிவேடுகளில் குறை இருப்பதால் மாவட்டக் கல்வி அதிகாரியாகவே தேங்கிக் கிடக்கிறார்.

“அவர் ஒய்வுபெற ஈராண்டுகளே உள்ளன. அவருக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க அமைச்சர் விரும்பினார்.

‘ஏற்கெனவே ஒரு முறை திரு.வி.ஆர். அரங்கநாத முதலியாருக்குப் பதவி நீடிப்புக் கொடுத்ததால், உன் பதவி உயர்வு தடைப்பட்டது.

‘இப்போது நல்ல மதிப்பீடு இல்லாத ஒருவர், நெ.து. சு. வைத் தாண்டிப் போக விடமாட்டேன் என்று நான் அடம் பிடித்தேன். இரண்டொரு திங்கள் இழுபறிக்குப்பின், அமைச்சர் ஒரு வழி கண்டுபிடித்துள்ளார்.

‘உனக்குப் பதவி உயர்வு கொடுத்து, சென்னை மாநகராட்சிப் பணியிலேயே மேலும் சிலகாலம் விட்டுவைப்போம்.

‘அப்படி நேர்வதால், உனக்குப் பதிலாக கே.பி.ஜி. மேனனை நியமிப்பதாக ஆணையிட்டு விடுவோம்.

‘அப்போது சுந்தரவடிவேலுக்கு முதலாவதாகவும் அடுத்து மேனனுக்கு மண்டல ஆய்வாளர் பதவி கொடுக்கலாம் என்று அமைச்சர் நினைக்கிறார்.

‘மாநகராட்சி கல்வி அலுவலர் பணியும் மண்டல ஆய்வாளர் பணிக்குச் சமம் என்று அரசு ஆணையிடுவதனால், அங்குச் செலவிடும் பணிக் காலமும் என் கணக்கிற்கு வரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/312&oldid=623231" இலிருந்து மீள்விக்கப்பட்டது