பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|ெ து. சுந்தரவடிவேலு 299

‘அதிகாரபூர்வமாக எழுதுவது போதும். முதலமைச்சருக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையே அவநம்பிக்கையையும் தீய எண்ணத்தையும் வளர்க்க விரும்பவில்லை.

‘தயவுசெய்து முதலமைச்சரிடம் சொல்லாதீர்கள்’ என்று மேயரை வெண்டினேன். அதோடு விட்டுவிட்டார்.

துணை இயக்குநரானேன்

திரு. சாதாசிவ ரெட்டி அரசுக்கு எழுதியதோடு நிற்கவில்லை. துணை இயக்குநர் ஒருவர் விடுப்பில் போவதற்கு ஏற்பாடு செய்துவிட்டார்.

அதை என்னிடம் கூறவில்லை. என்னை மாநகராட்சியிலிருந்து அழைத்துக்கொண்டு, துணை மயக்குநராக நியமிக்கும்படி, இயக்குநர் அரசுக்குப் பரிந்துரைத்தார். அரசு மட்டத்தில், மீண்டும் ஒரு குறுக்குச்சால் ஒட்டப்பட்டது. ஒருவரை மண்டல ஆய்வாளராக, சில காலம் வைத்திருந்த பிறகே, துணை இயக்குநராக நியமிப்பது மரபு.

அதை விட்டு விட்டு, சுந்தரவடிவேலுவை நேரே நியமிப்பது பொருத்தமா என்பது கோட்டைக் கோமான்களின் கேள்வி.

‘சுந்தரவடிவேலுவின் ஆற்றலும் பணியும் பக்குவமும் கல்வித் துறைக்கு நன்றாகத் தெரியும். அவர் நேரேதுணை இயக்குநராக மிகவும் பொருத்தமானவர்’ என்று சொல்லி இயக்குநர் உறுதியாக நின்றார்.

அதனால், நான்துணை இயக்குநராக (உயர்நிலைப் பள்ளிக் கல்வி) நியமிக்கப்பட்டேன்.

இதை இயக்குநர் எனக்கு இருபத்து நான்கு மணி முன்னதாகத் தெரிவித்தார்.

ஆணை வந்ததும் மேயர் என்னை விடுவிக்க விரும்பவில்லை. முதலமைச்சரிடம் முறையிட அனுமதி கேட்டார். நான் புதிய பதவிக்குப் போகத் துடித்தேன்.

ஆணையர் மேயரிடம் என் சார்பில் பேசி, விடுவிக்க வைத்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/315&oldid=623234" இலிருந்து மீள்விக்கப்பட்டது