பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 311

உடனே உறுப்பினர் நிதி திரட்டத் தொடங்கிவிட்டார். நீண்ட காகிதத்தில் தம் பெயரை எழுதி நூறு ரூபாய் நன்கொடையை எழுதினார்.

மளமளவென்று, மற்றவர்களும் அளித்தனர்; பெரும்பாலோர் அரை ரூபாய் கொடுத்தனர். இருநூறு ரூபாய்களுக்குமேல் அப்போதே சேர்ந்துவிட்டது.

பகல் உணவுக்குழு ஒன்று நிறுவினர்; அதைக்கொண்டு பள்ளி உணவுத் திட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

நிதி அளித்து, குழு அமைத்துப்பொறுப்பேற்ற அவர்களில் பெரும் பாலோர், அப்போது சைதாப்பேட்டையில் இருந்த செங்கற்பட்டு மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தில் அடிப்படை ஊழியர்கள்.

அந்த ஏழைகள் ஏற்றுக்கொண்ட பொறுப்பைத் திறமையாக, செம்மையாக நடத்தினார்கள்.

ஏறத்தாழ ஈராண்டு காலம், உள்ளூர் நிதி உதவியைக் கொண்டே செயல்படுத்தினார்கள்.

பின்னர், அத் திட்டத்தை மாநகராட்சி ஏற்றுக்கொண்டது.

கண்ணம்மா பேட்டை பின்பற்றியது

கண்ணம்மா பேட்டை பள்ளியின் தொடக்க விழாவின் போதும் பலமான சிற்றுண்டி விருந்தளித்தார்கள்.

சாபர்கான் பேட்டையாளர்களைவிட அதிகம் செலவு செய்தார்கள். வேண்டுகோளும் ஒரே வகையாக இருந்தது.

என் வழிகாட்டலும் பழையபடியே இருந்தது. பலன் அதிகமாக இருந்தது. நானுாறு ரூபாய்களுக்குமேல் அவ் விழாவின் போதே கிடைத்தது.

சற்றுத் தாராளமாக நிதி திரண்டபிறகு, பகல் உணவைத் தொடங்கும் படி ஆலோசனை கூறினேன்.

அப்படியே செய்தார்கள். இப் பள்ளியும் உள்ளூர்ச் செலவில், ஈராண்டுக்குமேல் பகல் உணவு அளித்தார்கள்.

பிறகு மாநகராட்சி ஏற்றது.

கர்ம வீரர் காமராசர்

இவ்விரு பள்ளிகளிலும் பெற்ற படிப்பினை, ஆறு ஆண்டுகளுக்குப்

பிறகு, தமிழகம் தழுவிய, மக்களால் தொடங்கி நடத்தப்பட்ட பகல்

உணவுத் திட்டத்திற்கு வழிகாட்டியாக அமைந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/327&oldid=623247" இலிருந்து மீள்விக்கப்பட்டது