பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.26 நினைவு அலைகள்

சீர்திருத்தத் தலைவர்கள் ஆகிய அனைவருக்கும் வேண்டியவராக வாழ்ந்த அறிஞர் அப்பா வா. தி. மாசிலாமணி முதலியார்,

சைவ நெறியில் ஆழ்ந்த பற்றுடையவர்; எளிமைக்கு எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்; பண்புக்கு உறைவிடம்; தொண்டிற்குத் தும்பி.

1929 ஆம் ஆண்டு டிசம்பர் திங்கள் ஈரோட்டில் தந்தை பெரியார் குஞ்சிதம் குருசாமி திருமணத்தை எவ்விதச் சடங்கும் இன்றி நடத்தி வைத்தார். அதற்கான அழைப்பைப் பெற்ற அப்பா அங்குச் சென்றார். வைதீகக் கோலத்தோடு உடனிருந்து விருந்தோம்பும் ஏற்பாடுகளை மிகுந்த உற்சாகத்துடன் ஏற்றுக்கொண்டார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப் படத்தில், தரையில் நடுவில் மகிழ்ச்சி பொங்க அப்பா மாசிலாமணி முதலியார் அமர்ந்து இருப்பதைக் காணலாம்.

அவர், வேண்டியவர்கள் வீட்டுத் திருமணங்களில் தாமே மகிழ்ச்சி யுடன் உதவிப்பணிபுரிவதை அய்ம்பது ஆண்டுகாலம்தமிழ்நாடு கண்டது. திருமணங்களில் இந்துமத பாடசாலையின் சார்பில் வாழ்த்து மடல் அளிக்கத் தவற மாட்டார்.

புக்கள் வாஷிங்டன்

புத்தியைத் தீட்டுவதோடு செயல் திறனையும் வளர்ப்பது கல்வியின் குறி. o

எட்டு வயதிற்குப்பின், அடிமை நிலையிலிருந்து விடுதலை பெற்ற அமெரிக்கச் சிறுவன் புக்கர் வாஷிங்டன், அதற்குப்பின் பகுதி நேரம் கல்வி கற்று, சில ஆண்டுகளில் பள்ளி இறுதி நிலைக்குச் சென்று பட்டமும் பெற்றார்.

தமது நீக்ரோ மக்களுக்காகப் பள்ளி ஒன்றைத் தொடங்கினார்.

‘பகுதி நேரம் படிப்பு, பகுதி நேரம் வேலை என்ற திட்டத்தில் இயக்கி அதை வளர்த்தார்.

டஸ் கிகி கழகம் என்ற பெயரில் இன்று அது அமெரிக்காவில் செயல்படுகிறது. அக் கல்வி நிலையம் அமெரிக்காவில் புகழ்பெற்ற கல்வி நிலையமாகும்.

புக்கரின் கல்வி முறையைத் தமிழகத்திற்கு அறிமுகப் படுத்திய நூல், தேசபக்தர் வ.வெ.சு.அய்யர் எழுதிய ‘மகான்புக்கர் வாஷிங்டன் என்றநூல்.

அப் பயிற்சி முறையால் ஈர்க்கப்பட்ட வா. தி. மாசிலாமணி, பாலாற்றங் கரையில், அதே பாணியில் செம்மையான கல்வி நிலையத்தை நடத்தி வந்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/342&oldid=623264" இலிருந்து மீள்விக்கப்பட்டது