பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 335

இடங்களுக்கு அழைத்துப்போவார்; அவ்வூர் வேலை முடிந்தால், திட்டமிட்டபடி, இரயிலிலோ, பேருந்திலோ ஏற்றி அனுப்புவார்.

பிரிட்டனுக்கும் பிற நாடுகளுக்கும் இடையே நல்லெண்ணத்தை வளர்ப்பதற்காகவே, இயங்கி வந்த அமைப்பு, பிரிட்டிஷ் கெளன்சில் என்பதாம்.

‘பிரிட்டிஷ் கெளன்சில்’ அலுவல் சார்பற்ற அமைப்பு.

அந் நாட்டின் மேலோர்களைத் தலைவர்களாகவும் உறுப்பினர் களாகவும் கொண்டு, பல்லாண்டுகளாக அரும்பணி ஆற்றி வருகிறது.

இக் கெளன்சிலுக்கு அந் நாடு முழுவதிலும் பெருமதிப்பு உண்டு. இதன் துணையால் ஆண்டுதோறும் எண்ணற்றோர், பிரிட்டனில் கல்விப் பயணத்தை மேற்கொண்டு நன்மை பெறுகின்றனர்.

இந் நிறுவனம் சிறிதும் சுணங்காது தொண்டாற்றுகிறது,

நாங்கள் முதன் முதல் சென்ற ஊர் ஆக்ஸ்போர்டு நகரமாகும்.

தொடர்கல்விக்கு கருத்தரங்கு

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தின் கல்லூரி ஒன்றில், ‘வாலிபர் களுக்கான தொடர் கல்வி பற்றிய கருத்தரங்கு ஒன்று நடந்தது. அதில் நாங்கள் இருவரும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள ஏற்பாடு செய்திருந்தார்கள்.

திட்டமிட்டபடி அங்குச் சென்றோம்; கல்லூரி அறையில் தங்கினோம். கருத்தரங்கில் கலந்து கொண்டோம்.

மூச்சுவிடல், உயிர் உள்ளவரை தொடர்கிறது. அதேபோல், கல்வி வாழ்நாள் முழுவதும் தொடரவேண்டும்.

அப்படியென்றால் நிதி வசதி படைத்தவர்களோ, அரசு உதவி பெற்றவர்களோ, பணிபுரியாமல், அலுவல் பார்க்காமல், முழு நேரமும் கற்பதில் மூழ்கி விடலாமா? கூடாது.

உரிய வயதில் ஏதாவதொரு தொழிலை மேற்கொண்ட வாலிபர்கள், அதற்கு இடையூறு இல்லாதவகையில், அவ்வப்போது, சில நாள்களோ பல நாள்கள் பகுதி நேரமோ, தொடர் கல்வி நிலையத்திற்குச் சென்று கற்க வழிவகை காணல் வேண்டும்.

தொடர் கல்வி எது பற்றியதாக இருக்கலாம்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/351&oldid=623274" இலிருந்து மீள்விக்கப்பட்டது