பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

350 நினைவு அலைகள்

ஏற்றுக்கொள்ளுவோம். விசுவாசிகளாகப் பின்பற்றுவோம்’ இப்படிக் கிறுத்தவக் கத்தோலிக்கப் பாதிரியார் பேசியதைக் கேட்டு விட்டு, மெல்ல நகர்ந்தோம்.

அடுத்து, ஒருவர் பேச்சு காதில் வீழ்ந்தது. அவரும் கிறித்துவை விசுவாசிக்கும் படி அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். அவர் ‘பிராடெஸ்டன்ட் பிரிவைச் சேர்ந்தவர்...

கடவுள் மறுப்பு

நான்காம் நபர் ‘இவர்கள் அனைவரும் சோம்பேறிகள்; கடவுள் பெயரைச் சொல்லி, உழைக்காமல், ஆனால் வளமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

‘இவர்களை நம்பாதீர்கள்; இவர்கள் சொல்லும் கடவுளையும் நம்பாதீர்கள். மக்கள் தொண்டு ஒன்றே பிறவியின் நோக்கம் என்று பேசினார்.

கேட்டோர் பலரா? இல்லை - ஏழெட்டுப் பேர். ஓரிடத்தில் அதிகம் கூடியது பத்துப் பன்னிரண்டு பேர்களே.

சமயப் பேச்சுகளையும் சமய மறுப்புப் பேச்சையும் கேட்டுவிட்டு நகர்ந்தோம். இருபது பேர்களிடையே ஒருவர் பேசிக்கொண்டு இருந்தார். அவர் அரசியல் பேசினார்.

ஆணவம் குறையும்

‘பொதுத்தேர்தல் வரும். கட்சிகள் போட்டியிடும். கன்சர்வேடிவ் கட்சியினர் சர்ச்சில் தலைமையில் வென்றாலும், தொழிற் கட்சியார் அட்லி தலைமையில் வென்றாலும், மக்கள் நிலையில் அதிக வேறுபாடு வந்துவிடாது.

‘வாக்காளர்களே தேர்தலைப் புறக்கணியுங்கள் இப்படி ஒருவர் உரை ஆற்றுகையில், அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒருவர் குறுக்கிட்டார்

‘நூற்றுக்குப் பத்துப் பேர்கள் மட்டுமே வாக்களிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் ஆறு பேர் சர்ச்சிலுக்கும் நான்கு பேர் அட்லிக்கும் வாக்களித்தால், சர்ச்சில் வெல்லப்போகிறார். நாம் தேர்தலைப் புறக்கணிப்பதால், தேர்தல் நின்று விடப் போவ தில்லையே’ என்று கேள்வியை எழுப்பினார்.

பேச்சாளர் வெகுளவில்லை. அமைதியாகப் பதில் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/366&oldid=623290" இலிருந்து மீள்விக்கப்பட்டது