பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விரு. து. சுந்தரவடிவேலு 355

பாடத் திட்டம் இல்லாப் படிப்பு:

அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பாடத்திட்டம் என்று ஒன்றும்

பிரிட்டனில் கிடையாது. இப்படிக் கேள்விப் பட்டபோது, எங்கள்

காதுகளை நம்ப முடியவில்லை. ஆனால் அது உண்மை.

ஒப்புதல் பெற்ற பாடத்திட்டம் இல்லாதபோது, ஆசிரியர்கள் எதை எப்படிச் சொல்லிக் கொடுப்பது? பள்ளி இறுதித் தேர்வின்போது, () ன்னின்ன மொழிகளில் பாடங்களில் இவ்வளவு தெரிந்திருக்க வேண்டும் என்று இலக்கை மட்டும் கல்வித்துறை காட்டிவிடும்.

பாடங்களை எங்கே தொடங்குவது, எப்படித் தொடங்குவது, என்ன வேகத்தில் நடத்திக்கொண்டு போவது என்பதை அந்தந்தப் பள்ளிக்கூட ஆசிரியர்களே கூடி ஆலோசித்து முடிவு செய்து கொள்ள உரிமை பெற்றிருக்கிறார்கள்.

அவ்வுரிமையில் தலையிடும் கட்டாயத்தை உருவாக்கும் வகையில் அந்த நாட்டு ஆசிரிய சமுதாயம் நடந்து கொண்டதே இல்லை.

அவ்வளவு பொறுப்புணர்ச்சி, அவர்களுக்கு!

எல்லாப் பள்ளிக் கூடங்களிலும் சமையற் கூடங்களும் உணவுக் கூடங்களும் உண்டு.

மாணாக்கர் பள்ளிக் கூடத்திலேயே பகல் உணவு உண்கிறார்கள்.

மேல்தட்டு வருவாய் உள்ள வீட்டுப் பிள்ளைகளிடம் ஒரளவு உணவுக் கட்டணம் பெற்றுக் கொண்டார்கள்.

சில ஊர்களில் தனித்தனி சமையற் கூடங்களுக்குப் பதில், மையச் சமையற்கூட முறையை நடைமுறைப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

பள்ளிகள் - தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள் என இருபெரும் பிரிவுகளாக அமைக்கப்பட்டிருந்தன.

உயர்நிலை வகுப்புகளில் - ஈராண்டு - ஏட்டுக் கல்விப் பிரிவு, தொழிற் பயிற்சிப் பிரிவு என இரண்டு கல்வி வாய்க்கால்கள் இருந்தன. ‘கல்வி என்பது அறிவை மலரச் செய்யும் முயற்சி; எனவே, பள்ளி நிலையில் தொழிற் பயிற்சிக்கு இடம் இல்லை என்ற கருத்து, நெடுங்காலம் பிரிட்டனில் செல்வாக்கு பெற்றிருந்தது.

ஆனால், சமுதாயத்தின் தேவை, கற்போரில் பெரும்பாலோர்க்குக் செயல் போக்கில் உள்ள ஆர்வம் முதலியன, தொழிற் பயிற்சிட்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/371&oldid=623296" இலிருந்து மீள்விக்கப்பட்டது