பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. அலுவலுக்கு அடங்கியே உரிமை

கல்யாணசுந்தரரின் அறிவுரை

நான், கோவையில் மாவட்டக் கல்வி அலுவலர்க்கான பயிற்சி பெற்ற கதையைச் சொல்லுமுன், அதற்கு முந்திய நிகழ்ச்சியொன்றைக் காட்டுவது நல்லது.

என்னிடம் உடல்நலச் சான்றிதழ் கேட்டதையும் அதை வாங்கி அனுப்பியதையும் முன்னரே குறிப்பிட்டிருந்தேன்.

அப்படிச் செய்த பிறகு, நானும் என் மனைவி காந்தம்மாவும் காஞ்சிபுரம் சென்று வந்தோம்.

உறவினர்களைக் கானவா? இல்லை.

அன்றைய நிலையில் உறவினர்கள் என் கலப்புத் திருமணம் பற்றிப் பகைகொண்டிருந்தார்கள்.

காஞ்சிபுரம் சேலை எடுத்துக்கொடுக்கச் சென்றேனா? இல்லை.

பின் எதற்குச் சென்றேன்?

நல்லவர் ஒருவரிடம் வாழ்த்துப் பெறுதவற்குச் சென்றோம்.

அவர் யார்? காஞ்சிபுரம் பள்ளி ஆய்வாளர் திரு. டி. எஸ். கல்யாணசுந்தரம் பிள்ளை. அவர் முன்னர், தஞ்சாவூரில் பள்ளி ஆய்வாளராக இருந்தார். அங்கு அவரது அரவணைப்பில் நான் வளர்ந்தவன்.

‘'நான், மாவட்டக் கல்வி அலுவலராகப் போகிறேன் என்ற செய்தியைக் கேட்டு அவர் பூரிப்பார் மெய்யாகவே மகிழ்வார் என்பது எங்கள் எண்ணம்.

எனவே, முன் அறிவிப்பு கொடுத்துவிட்டு, என் மனைவியுடன் கல்யாண சுந்தரனாரைக் காணச் சென்றேன்.

நான் காஞ்சியில் உயர்நிலைப் பள்ளி மாணவனாக இருந்த போது குடியிருந்த மாசிலாமணி முதலியார் வீட்டிற்கு மேலண்டை வீட்டில், ருெ. கல்யாணசுந்தரனார் தங்கி இருந்தார்.

அவர்கள் இல்லத்தில் இரண்டு நாள்கள் தங்கினோம். அவ்விட்டாசியாரும் அவரும் எங்களை அவர்கள் குடும்பத்தவர்களைப் போன்ற பரிவுடன் நடத்தினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/38&oldid=623305" இலிருந்து மீள்விக்கப்பட்டது