பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/408

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

392 நினைவு அலைகள்

இளைஞர்களே தயவு செய்து என்னைப்போன்று கோட்டை விடாதீர்கள். நேர்மையும் உழைப்பும் நம்மவர்களுக்குத் தேவை யில்லை. ஒத்து ஊதும் திறமையையே நாடி நாசமாகப் போவார்கள்.

ஆகவே, உங்கள் உழைப்பு ஒளிவிடக்கூடிய பிற நாடுகளில் அலுவல் கிடைத்தால், அங்குச் செல்லுங்கள்; மதிப்போடு வாழுங்கள். ஆணவத்தை மட்டும் காட்டாதீர்கள். அடிமையாகிப் பல் இவிக்காதீர்கள்.

இயக்கக வளாகத்தில் குடிபுகுந்தேன்

இயக்குநர் கோவிந்தராசுலுவுக்கு ஆர்வத்தோடு, வஞ்சகமில்லாமல் பணிபுரிந்தேன். என்னால் அவருக்குத் தொல்லையேதும் ஏற்படாதபடி விழிப்பாகப் பார்த்துக்கொண்டேன்.

முன்னர் பழக்கமில்லாத என்னிடம் அவர் முழு நம்பிக்கை கொண்டார்.

கல்வி இயக்கக வளாகத்தில் குடியிருக்கும் பங்களா ஒன்று இருந்தது. அதில் சதாசிவரெட்டி குடியிருந்தார்.

அவர் அதைக் காலிசெய்தபோது, எவர் அந்தப் பங்களாவுக்குக் குடி போவது என்ற கேள்வி எழுந்தது.

இயக்குநருக்கு ஒரு பங்களா இருந்தது. எனவே, அவர் அங்குக் குடியேறவில்லை. இயக்குநர் என்னை அழைத்து ‘அவ்வில்லத்திற்கு நீ வந்துவிட்டால், நான் சட்டென்று கூப்பிட்டுப் பேச வசதியாக இருக்கும். உன் வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு, இங்கு வந்துவிடு’ என்றார்.

அந்த ஏற்பாடு எனக்குப் பிடிக்கவில்லை. ஏன்? தனிக்குடித்தனம் வந்துவிட்டால் குடும்பப் பொறுப்பு சுமந்துவிடுமே; எனினும் மறுமொழி கூறாமல் ஏற்றுக்கொண்டேன்.

மாலை வீடு திரும்பியதும் இச் செய்தியைக் காந்தம்மாவிடம் கூறினேன். அவருக்கு இடி வீழ்ந்ததுபோல் இருந்தது.

எனினும் தியாகத்திற்காகவே பிறவி எடுத்த அவர், என் முடிவைப் பற்றி, மறுசொல் சொல்லாமல் அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார். சில நாள்களில் இயக்கக வளாகத்தில் உள்ள விட்டுக்குக் குடி பேயர்ந்தோம்.

இரவு பகல் பாராமல், பார்வையாளர்களைக் காணும் நிலைக்கு என்னைத் தள்ளிக் கொண்டேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/408&oldid=623337" இலிருந்து மீள்விக்கப்பட்டது