பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/433

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெ. து. சுந்தரவடிவேலு 4.17

‘அதுவும் சரியே’ என்றார்.

நாங்கள் கலந்து பேசி முடிவு எடுத்தபடி, நீண்ட குறிப்பு எழுதினோம்.

கிணற்றில் போட்ட கல்

இரண்டு மூன்று முறை படித்தோம். இதமான சொற்களை இடையே சேர்த்தோம். அந்த இரகசியக் குறிப்பை இயக்குநர் கோவிந்தராசுலு நாயுடுவிடம் கொடுத்தேன்.

‘'வேண்டுமென்றே, இக் குறிப்பில், மேற்பார்வையாளரோ, நானோ கையெழுத்திடவில்லை. தாங்கள் விரும்பினால், கையெழுத்துப் போட்டுத் தருகிறேன்’ என்று சொன்னேன்.

இயக்குநர் படித்துப் படித்துப் பார்த்தார்; மீண்டும் படித்தார்.

“இக் குறிப்பு சரியானது; ஏற்றுக்கொள்ள வேண்டியதே. ஆனால், நானாக இதை முதல்வரிடம் காட்ட மாட்டேன். அவராக என்னைக் கேட்டால், அப்போது பார்த்துக் கொள்ளலாம்.

‘இதற்கு இடையில் பெரியவருக்குக் காலம் வேறு சிந்தனையைத் தரட்டும்’ என்று பிரார்த்திப்பேன்.

‘அவ்வளவு பெரியவரிடம் உங்கள் திட்டம் சரியாக இயங்காது என்று எப்படிச் சொல்வது?’ என்று கூறியபடி இயக்குநர் இரகசியக் குறிப்பைத் தம் கைப்பெட்டியில் வைத்துக்கொண்டார்.

அரைவேளைப் படிப்புத் திட்டம், ‘கிணற்றில் கல் போட்டாற்போல் ஓசை எழுப்பாது இருந்தது.

நாள்கள் சென்றன; வாரங்கள் வந்தன; மாதங்கள் ஓடின. ஆறு ஏழு திங்கள் கடந்துவிட்டதால், ஆறின கஞ்சி பழங்கஞ்சி’ என்று எண்ணி மகிழ்ந்தேன்.

முதல் வரைக் காணல்

1953 ஆம் ஆண்டு மே திங்கள் இறுதிப் பகுதி, ஒருநாள் மாலை, இயக்குநர் கோட்டைக்குப் புறப்பட்டார்.

மலபார் மாவட்டத் தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு நேரடிச் சம்பளம் கொடுப்பது பற்றிப் பேசப்போனார்.

அப்போது என்னையும் தம்முடன் அழைத்துக்கொண்டு போனார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/433&oldid=623365" இலிருந்து மீள்விக்கப்பட்டது