பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/436

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42O நினைவு அலைகள்

‘முதலமைச்சரும் அவரது தனிச் செயலர் திரு. சபாநாயகமும் இன்னும் கோட்டையில்தான் இருப்பார்கள். முதலமைச்சரோடு நேரே பேசுவது முறையல்ல என்றால், தனிச் செயலரிடம் பேசி, சுற்றறிக்கையின் அமைப்பு முறையை நிர்வாகப் பாணியில் மாற்றிக்கொள்ள அனுமதியைக் கேளுங்கள். அவர் முதல் அமைச்சரைக் கேட்பார். ஒப்புக்கொண்டால், நல்லதாகி விடும்’ என்றேன்.

‘'வேண்டாம்; முதலமைச்சர் பாணியிலேயே சுற்றறிக்கை அனுப்புவ தால், ஏற்படும் நன்மை தீமைகளுக்கு நான் பொறுப்பேற்றுக்கொள்ளு கிறேன்’ என்று இயக்குநர் கூறினார். அப்புறம் நான் குறுக்கே நிற்கவில்லை.

சுற்றறிக்கை எழுதப்பட்டது. இடையிடையே சிறு சிறு சொல் மாற்றங்களைக் கூறினேன்; ஏற்றுக்கொண்டார்.

இரவோடு இரவாக ஆனை

சுற்றறிக்கையை ஆயத்தம் செய்து கொண்டிருக்கையில் ‘இந்து’ ‘எக்ஸ் பிரஸ்” அலுவலகங்களில் இருந்தும் இயக்குநரைக் கூப்பிட்டார்கள்.

‘புதிய கல்வித் திட்டச் சுற்றறிக்கை ஒன்றை நீங்கள் இன்று அனுப்பப் போகிறீர்களாம். அது நாளைக் காலை வரும் நாளிதழி லேயே வரும்படி பார்த்துக்கொள்ளச் சொல்லி முதலமைச்சரின் அலுவலகத்திலிருந்து, தொலைபேசிச் செய்தி வந்துள்ளது. அந்த அறிக்கையை வாங்கிக் கொள்ள, எப்போது, எங்கே வர?’ என்று கேட்டனர்.

‘சுற்றறிக்கையை அனுப்பிவிட்டே வீட்டிற்குப் போவோம். அது உங்கள் அலுவலகத்திற்கே வந்து சேரும்’ என்று இயக்குநர் பதில் அளித்தார்.

சொன்னபடியே நடந்தது. இயக்குநர் சொல்ல நான் எழுதி முடித்ததை வாங்கிப் படித்தார். சில சொல் மாற்றம் செய்தார். கிருஷ்ணசாமி அய்யங்காரை அழைத்து, அதை அவரிடம் கொடுத்தார்: அய்யங்கார், சுற்றறிக்கைக்கு அலவலக வரிசை எண் போட்டு வந்து காட்டினார். ஒப்புதல் பெற்றுக்கொண்டு போய், தட்டச்சர்கள் பக்கத்தில் உட்கார்ந்து, முழு அறிக்கையும் விரைந்து அச்சாகத் துண்டுகோலாக இயங்கினார்.

சுற்றறிக்கையை ‘ஸ்டென்சில் எடுத்து இயக்குநரிடம் கொண்டு வந்து காட்டினார். பிழையின்றி இருந்ததால் வெளியிடக் கட்டளை கிடைத்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/436&oldid=623368" இலிருந்து மீள்விக்கப்பட்டது