பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

422 நினைவு அலைகள்

உன்னித்தனும் கோவிந்தராசுலுவும், இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள்.

அமைச்சரின் கேள்வி

சில மணித்துளிகளுக்குப்பின், கல்வி அமைச்சர் டாக்டர் எம். வி. கிருஷ்ணராவ், இயக்குநரோடு தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

‘இன்று காலை, செய்தித் தாளில் வெளியாகி இருப்பது உண்மை தானா? அரைவேளைப் படிப்புத் திட்டம் பற்றி, இதுவரை என்னிடம் ஒன்றும் சொல்ல வில்லையே. கல்விச் செயலர் இடமாவது சொன்னிர்களா? சொல்லியிருந்தால், அவர் ஏன் என் காதில் போடவில்லை?

‘இத்திட்டத்தை அரசுக்கு ஆலோசனையாக அல்லவா நீங்கள் அனுப்பி வைத்து இருக்கவேண்டும்?

‘இவ்வளவு பெரிய தலைகீழான மாற்றத்தை அமைச்சரவையில் வைத்து ஒப்புதல் பெற்ற பிறகு அல்லவா நிறை வேற்றி இருக்க வேண்டும்? ஏன் நீங்களாக இவ்வளவு பெரிய மாற்றத்தைச் செய்து விட்டீர்கள்?’ என்று கல்வி அமைச்சர் கேட்டார்.

‘'நான் முதலமைச்சர் கட்டளைக்குப் பணிந்து நடந்தேன்’ ஆறு திங்களுக்கு முன்பு, அரை வேளைப் படிப்பு போதும் என்கிற முறையில் சிந்தித்துத் திட்டம் தீட்டும்படி முதலமைச்சர் இரகசியக்குறிப்பு வந்தது.

‘நேற்று வரை நான் பதில் குறிப்பு அனுப்பவில்லை. மாற்றுக் குறிப்பு கொடுத்தால், பெரியவர் மனம் புண்படுமே என்று சும்மா இருந்தேன்.

‘நேற்று மாலை, இரவோடு இரவாக அதுபற்றிச் சுற்றறிக்கை அனுப்பிவிட்டு அப்புறம் தகவலுக்கு மட்டும் அதை அரசுக்கு அனுப்புங்கள் என்றார்.

‘இதை விவரமாக எழுதி அனுப்பி உள்ளேன். என் கடிதம் தங்கள் பார்வைக்கு, கோட்டையில் காத்திருக்கும்’ என்று இதமாகப் பதில் கூறினார்.

கோட்டைப் பெரியவர்கள் முணுமுணுப்போடு நின்று விட்டார்கள்.

இருவருமே திட்டத்தின் நன்மை, தீமை பற்றி இயக்குநரிடம்

பேசவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/438&oldid=623370" இலிருந்து மீள்விக்கப்பட்டது