பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 நினைவு அலைகள்

வருவாய்த் துறை அலுவலர்களுக்கு. அது என்ன சொல்லிற்று?

‘'சீகாகுளம் மாவட்ட கல்வி அலுவலரிடம் பாதுகாப்புப் பத்திரங்கள் வாங்கும்போது, பல குடியானவர்கள், எவ்வளவுக்கு, வாங்க வேண்டுமோ, அவ்வளவுக்கு வாங்காமல், குறைந்த தொகைக்கு, வாங்குகிறார்கள்.

‘அக்குடியானவர்களின் நில உடைமைக் கணக்கு, கல்வி அலுவலருக்குத் தெரியாதாகையால், அவர் குறைந்த தொகையை ஏற்றுக்கொள்ளுகிறார்; அவர், ஆசிரியர்களிடம் மட்டுமே பத்திரங்கள் விற்பனை செய்யலாம் என்று கட்டுப்படுத்திவிட்டால், குடியானவர்கள் குறைத்துக் கொடுக்கும் வாய்ப்பு அடைபட்டு விடும் என்று வருவாய்த்துறை அலுவலர்கள் கூறிய ஆலோசனையை ஆழ்ந்து சிந்தித்தோம்.

‘வருவாய்த்துறை அலுவலர்கள் சுமக்க வேண்டிய பளுவை. மாவட்டக் கல்வி அலுவலர் சுமப்பதற்கு நாம், அவருக்கு நன்றி செலுத்த வேண்டும்.

‘ஆயிரம் ரூபாய்க்குப் பத்திரம் வாங்க வேண்டியவர், கல்வி அலுவலரிடம் எண்ணுாறு ரூபாய்களுக்கே வாங்கி இருந்தால், பாக்... இருநூறு ரூபாய்களை அவ்வட்ட தாசில்தாரோ, பிற அதிகாரிகளோ, அந்தக் குடியானவர்களிடம் வாங்குவதற்குத் தடை இல்லை’ என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

‘கல்வி அலுவலர், பாதுகாப்புப் பத்திரம் விற்பதை கட்டுப் படுத்தத் தேவை இல்லை’ என்று ஆணை பிறப்பித்தார், மாவட்ட ஆட்சித் தலைவர்.

பாடம் கற்றேன்

முப்பது வயதில், நடந்த இந் நிகழ்ச்சியால், நான் ஒரு பெரிய பாடத்தைக் கற்றுக் கொண்டேன். அது என்ன?

மக்கள் இனம் உயர்ந்தது எதனால் ஆறாவது அறிவைப் பெற்றிருப்பதால்! அதைக்கொண்டு, கருத்து மண்டலத்தில், உயிர்க் கருணை வரை உயர்ந்து வளர்ந்திருப்பதால்!

வித்து விதைத்துப் பயிரிடும் கலையைக் கற்றதால் 1, ஒட்டுகள் போட்டு வகை வகையான, தானியங்களைக் காய்களைக் கனிகளைப் பயிரிடக்கற்றதால் அவற்றைக் கொண்டு அறுசுவை உணவுகளைச் சமைக்கும் திறன் பெற்றதால்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/84&oldid=623456" இலிருந்து மீள்விக்கப்பட்டது