பக்கம்:நினைவு அலைகள்-2.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74 நினைவு அலைகள்

அய்ந்தாவது மட்டுமே படித்த ராஜாராவ் ‘மனித இனம் என்னும் பெருமையைக் காதால்கூடக் கேட்டறியாது, அரச பரம்பரை என்ற ஆணவமும் அதற்கேற்பப் பகட்டுச் செலவுப் போக்கும் கொண்டிருந்ததைப் பற்றிப், பரிதாபப்பட்டேன்.

அதை விழுங்கிக்கொண்டு, அவரது குழந்தையை வாழ்த்தினேன்

காந்தம்மையாருக்குப் புதிய பதவி

இந்தியப் பொது மக்கள், இந்தியாவை நெருங்கி வரும் போயைப் பற்றிப் பிதி அடையாதிருக்கவும் உணவுப் பொருள்களைப் பதுக்கலைத. தவிர்க்கவும் தீவிரப் பிரசாரகர்கள் மாவட்டம் தோறும் நியமிக்கப்பட்டார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு தேசிய போர் ஆதாவு அமைப்பாளரும் ஒரு, ‘பெண் சொற்பொழிவாளரும் நியமிக்கப் பட்டார்கள்.

சீகாகுளம் மாவட்டத்திற்கு அப் பகுதியில் திறமையான ‘பெண் சொற்பொழிவாளர் எவரும் கிடைக்கவில்லை.

என் மனைவி காந்தம்மா படிப்பில் மூன்று பட்டங்கள் பெற்றவர்.

அதோடு தெலுங்கை முறையாகக் கற்று, தெலுங்கில் பேசவல்லவர் என்ற செய்தி வெள்ளையரான மாவட்ட ஆட்சித் தலைவருக்கு, எப்படியோ எட்டிற்று.

அவருடைய ஆணைப்படி, சீகாகுளம் துணை ஆட்சியாளர் (இவரும் வெள்ளையர்) என்னை அழைத்துப் பேசினார்.

என் மனைவியை பெண் சொற்பொழிவாளர் பதவிக்கு நியமிக்க ஆட்சித் தலைவர் விரும்புவதாகவும் அதற்கு இசைவு தரும் படியும் கோரினார். மனைவியைக் கேட்டுச் சொல்லும்படி சொன்னார்.

‘பெண்கள் கூட்டங்களில்தான் பேசுவேன்; நீங்கள்போகும் ஊர்களுக்கும் அவற்றின் அருகில் உள்ள ஊர்களுக்கு மட்டுமே செல்வ இயலும். எங்கெங்கோ தொலைதுாரம் போகச் சொன்னால், இயலாது ‘ இந்த நிபந்தனைகளைத் துணை ஆட்சியாளரிடம் கூறினேன்.

அவர் அதிர்ச்சியடையவில்லை. என் மனைவியின் படிப்பு முதலிய தகவல்களைக் கேட்டுக் குறித்துக் கொண்டார். என்னிடமோ என் மனைவியிடமோ மனு ஏதும் கேட்கவில்லை.

சில நாள்களுக்குப் பின், மாவட்ட ஆட்சித் தலைவரிடம் இருந்து என் மனைவிக்கு நியமன ஆணை வந்தது; அவ் வேலைக்கு ஊதியம் எவ்வளவு? திங்களுக்கு நூற்று அய்ம்பது ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-2.pdf/90&oldid=623463" இலிருந்து மீள்விக்கப்பட்டது