பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 ... " நினைவு அலைகள் “எனவே, என் தம்பியாக இருந்து, இந்தப் பணியிலேயே உற்சாகத்துடன் தொடருங்கள்” என்று டாக்டர் பாலை வேண்டிக் கொண்டேன். - - "ஆசிரியர் கல்லூரி முதல்வராக மாற்றிவிடும்படி கேட்கலாம் என்ற நினைப்போடு அலுவலகம் வந்தேன். இப்போது, நீங்கள் காட்டும் அன்பினால் இதே பணியில் இருக்க இசைகிறேன். கர்த்தர் உங்களை வாழ்த்தட்டும்” என்றார். o அலுவலகத்தில், பலர் என்னை வாழ்த்தக் காத்துக்கொண்டு இருந்தனர் வாழ்த்தி மகிழ்ந்தனர். பன்மொழிப் புலவர் தெ.பொ.மீ. வாழ்த்து முதலில் வந்த வாழ்த்துக் கடிதம் எவருடையது? பன்மொழிப் புலவர், தெ. பொ. மீனாட்சிசுந்தரனாருடையது. * * * நான், சென்னை மாநகராட்சியில் பணி புரிந்தபோது, எங்களுக்குள் ஏற்பட்ட தொடர்பு, நட்பாக வளர்ந்தது. அவர் “பொதுக்கல்வி டைரக்டர் பதவி பெற்ற முதல் தமிழன் நான்” என்பதைப் பெருமையுடன் சுட்டிக் காட்டிப் பாராட்டி மகிழ்ந்தார். * ஆள் வழியாக அனுப்பிய அக் கடிதத்திற்கு உடனே பதில் எழுதி அனுப்பினேன். டைரக்டர்’ என்ற சொல்லுக்குப் பதில் தமிழ்ச் சொல்லை வழக்கில் கொண்டுவர நினைத்தேன். 'இயக்குநர் என்ற சொல்லைப் பயன்படுத்தினேன். இயக்குநர் என்ற இந்தச் சொல் இன்றும் வழக்காற்றில் உள்ளது. மாலை நெருங்க நெருங்க, பல ஊர்களில் இருந்து பாராட்டுத் தந்திகள் வந்து குவித்த வண்ணம் இருந்தன. அடுத்துச் சில நாள்கள் வரை, பாராட்டுக் கடிதங்களுக்குக் குறைவே இலலை. - அதிர்ச்சி தரும் ஆலோசனை பொதுக்கல்வி இயக்குநர் கோவிந்தராஜுலு நாயுடுவை அவர் வந்ததும் கண்டு வணங்கினேன்; மாலையிட்டேன்; என்னைப் பற்றி நல்ல குறிப்புகள் எழுதியத்ற்கு நன்றி கூறினேன். அவர், அடுத்த நாள் அலுவலகம் வந்ததும், என்னைத் தம் அறைக்கு அழைத்தார். தன்னோடு, கோட்டைக்கு அழைத்துச் சென்றார். *

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/46&oldid=788264" இலிருந்து மீள்விக்கப்பட்டது