பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Hi - நினைவு அலைகள் புள்ளி விவரங்களையும் கணக்கையும் இரண்டொருமுறை சரி பார்த்தேன். --- எனக்கு முழு' நம்பிக்கை வந்தபிறகு, அதை என் தனி அலுவரிடம் கொடுத்துத் தட்டச்சு செய்துகொண்டேன். பிறகு, முதலமைச்சர், காமராஜரிடம் சென்றேன். “ஒய்வூதியத் திட்டத்தை ஆயத்தம் செய்துவிட்டேன். எப்போது தங்களுக்கு வசதிப்படுகிறதோ, அப்போது விளக்குகிறேன்” என்றேன். “விவரங்களை உங்கள் அமைச்சரிடம் விளக்குங்கள் அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் ஆயத்தமாய் இருக்கிறீர்கள் என்பதை நான் அவரிடம் சொல்லிவிடுகிறேன். “அவர் அழைக்கும்போது, திட்டத்தைக் கொண்டுபோய்க் காட்டுங்கள்” என்பது முதலமைச்சரின் ஆணை. கல்வி அமைச்சர் அழைத்தார் கல்வி அமைச்சர் சி. சுப்பிரமணியம் ஒருநாள் அழைத்தார்; திட்டத்தைக் கொண்டுசென்றேன். நிதிச் செயலர் திரு. டி. ஏ. வி. வர்கீஸ் அமைச்சரோடு இருந்தார். என் திட்டத்தின் படி ஒன்றை ஒவ்வொருவரிடமும் கொடுத்தேன். o புள்ளி விவரங்களை எங்கிருந்து எடுத்தேன் என்று ஆதாரங்களை ஆங்காங்கே காட்டி இருந்தேன். ஆதார வெளியீடுகளைக் கையில் கொண்டுசென்று இருந்தேன். குறிப்பிட்ட இடங்களில் நிதிச்செயலர் அவற்றைப் புரட்டிப் பார்த்தார். திட்டம் முழுவதையும் அப்படிச் சரி பார்த்த பிறகு, "புள்ளி விவரங்கள் ஒப்புக் கொள்ளத்தக்கவை. செலவைக் கணக்கிட்ட முறையும், சரியே. செலவு, அவர் போட்டு இருப்பதற்குக் குறைவாகுமே ஒழிய, அதிகமாக வாய்ப்பில்லை” என்று நிதிச்செயலர், நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியத்திடம் கூறினார். நிதி அமைச்சருக்கு மிக்க மகிழ்ச்சி. முகம் மலர 'அடுத்து' என்றார். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/76&oldid=788595" இலிருந்து மீள்விக்கப்பட்டது