பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாாடித நேருவின் 9 பெங் நிய 47 உலகளாவிய அவரது பார்வை இந்தியாவின் எளிய மக்களின் அவல வாழ்வை ஊடுருவி, உணர்ந்தது. கல்லூரிப் படிப்பு வாய்ப்புகள் பெருகிவரும்போதும் கல்லூரிப் படிப்பை நாடாமல், பள்ளி இறுதி வகுப்போடு நின்று விடுவோரின் நிலையை எண்ணிப் பார்த்தார், ஜவஹர்லால் நேரு, அவர்களில் பலர் உயர் கல்வியில் தொடர வசதியும், வாய்ப்பும் இல்லாதவர்களாகவும் இருக்கலாம். அதைவிட, நாலு காசு சம்பாதித்து வந்து, பெற்றோர்களையும் அண்ணன் தம்பிகளையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் ஸ்ளவர்களே அதிகம் என்பது புலனாயிற்று. பிற மேம்பாட்டுத் திட்டங்களுக்குக் கொடுக்கும் முன்னுரிமைக்குக் குறையாத முன்னுரிமையை, வேலையில்லாத் திண்டாட்ட ஒழிப்புக்குக் கொடுக்க வேண்டுமென்று கருதினார். எண்ணியதை முடித்தார். எப்படி? பள்ளியில் வேலை “வேலையில்லாத படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு’ என்னும் அதிரடித் திட்டமாக வெளியாயிற்று. இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்திற்கும், சில ஆயிரம் பேர்களை ஒதுக்கினார்கள். ஒவ்வோர் மாநிலத்திலும் பள்ளியிறுதித் தேர்ச்சி பெற்றவர்களைப் பயன்படுத்தி, பள்ளியில்லா ஊர்களில் பள்ளிகளைத் திறக்க வேண்டும். இரண்டு மூன்று ஆண்டுகளில் எல்லாச் சிற்றுார்களிலும் தொடக்கப் பள்ளி நடக்கிறது என்ற நிலையை உருவாக்கிவிட வேண்டும். புதுப் பள்ளிகளிலேயே, ஒதுக்கிய படிப்பாளிகள் அனைவருக்கும் வேலை கொடுக்க முடியாமல் போய்விட்டால்? மாணவர்களின் வருகை பெருகியதால் எங்கெங்கே, இரண்டாவது ஆசிரியரோ மூன்றாவது ஆசிரியரோ தேவைப்படுகிறதோ, அங்கு எல்லாம் கூடுதல் ஆசிரியரை நியமிக்க, இந்த ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத் திட்டத்தின்கீழ் ஒதுக்கப்பட்ட அத்தனை பேர்களுடைய ஊதியச் செலவையும் மைய அரசே ஏற்றுக் கொள்ளும். எவ்வளவு காலத்திற்கு ஏற்றுக் கொள்ளும்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/87&oldid=788697" இலிருந்து மீள்விக்கப்பட்டது