பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக.நேருவின் கவலை 53 ஒருமுறை திண்டுக்கல் நகர்மன்றத் தலைவராகவும் துெ கண்டாற்றினார். இன்றும் வழக்குரைஞராகச் செயல்பட்டு வருகிறார். திரு. பொ. வே. தாஸ், இந்திய சமுதாயம் சாதிப் பிரிவுகளும் சய வேற்றுமைகளும் அற்ற ஒன்றுபட்ட சமுதாயமாக வேண்டும் பதில் இளமை முதல் உறுதியான நம்பிக்கை கொண்டவர். 'சொல்லும் செயலும் ஒத்திருக்க வேண்டும் என்ற நெறியில் வளர்ந்த அவர், கிறித்தவராகிய - தமிழ்நாட்டின் காங்கிரசின் அ வியலிலும் தொழிலாளர் இயக்கங்களிலும் முன்னணியில் இருந்தவரான - திரு. சர்க்கரை செட்டியாரின் மகள் செல்வி ஜானகியை மணந்துகொண்டு நிறை வாழ்வு வாழ்கிறார். அவரது இளைய தங்கையாகிய செல்வி சகுந்தலாவை திரு. ச. சுப்பிரமணியம் கலப்பு மணம் செய்து கொண்டார். தன் தகுதியும் உறவுச் சிறப்பும் பெற்ற தாஸ், படாடோபம் இஸ்லாதவர். இன்றும் கதர் அணிபவர். அமைச்சரின் துாதுவர் திரு. பொ. வே. தாஸ், வளவளவென்று பேசி எவருடைய நொத்தையும் கொள்ளை கொள்ளாத இயல்பினர். எனவே, ாேனைக் கண்டதும், "நான் என் வேலையாக வரவில்லை. கல்வி அமைச்சரின் து துவராக வந்து இருக்கிறேன். அவர் உங்களுக்குச் சொல்லி அனுப்பிய செய்தியைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டுப் போகலாமா?” என்று தாஸ் தொடங்கினார். என்ன செய்தி? "நான் பழைய சி. சு. தான். கல்வி அமைச்சராகிவிட்டதால் மாறிவிடவில்லை; நெ. து. சு. என்னுடன் பழைய நட்புப் பாணியிலேயே பழகலாம். * 'அலுவல் பற்றி வந்து பார்க்கும்போது, பழக்கமில்லாதவர் பொல் நடந்து கொள்ளத் தேவையில்லை. 'எப்போதாவது, ஏதாவது, தனியே சொல்ல விரும்பினாலும் வந்துசொல்லி விட்டுப் போகலாம்’ என்பது சி. சுப்பிரமணியம் சொல்லியனுப்பிய செய்தி. இச்செய்தி கல்வி அமைச்சரின் பெருந்தன்மையின் வெளிப்பாடு. * =

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/93&oldid=788703" இலிருந்து மீள்விக்கப்பட்டது