பக்கம்:நினைவு அலைகள்-3.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யே ஜர் என் படத்தைத் திறந்தார் 59 காமராசரைச் சந்தித்தேன் அலுவலகங்கள் தொடங்கும் நேரத்திற்குச் சென்னைக் கோட்டைக்குச் சென்றேன். முதலமைச்சர் காமராசர் அலுவலர் அாறயில் இருந்தார், பேட்டி கோரினேன்; கிடைத்த்து. காமராசர் கட்டளைப்படி நாற்காலியில் அமர்ந்ததும், தியாகராயர் கல்லூரி அழைப்பினை அவர் முன் நீட்டினேன். "இதோ, எனக்கும் வந்தது!” என்று, மேசைமேல் இருந்த அழப்பினை எடுத்துக்காட்டினார். * + "...அய்யா! தயவுசெய்து என்னை மன்னியுங்கள். அக் கல்லூரி புதlவர் செய்துள்ள ஏற்பாடு முறையல்ல. o "ஒருவர் பெரிய பதவியில் பணியாற்றிவிட்டு ஒய்வுபெறும் 1ளையில்தான், அவருடைய திருவுருவப் படத்தைத் திறந்து அப்பதுண்டு. "அதுவரை பொறுக்காது, ஒருவர் பெரும் பதவிக்கு வந்ததும் அவது படத்தைத் திறந்து வைப்பது நிர்வாக மரபுக்குச் சரியாகப் வில்லை. 'தயவுசெய்து, அந் நிகழ்ச்சிக்குப் போகாமல் இருந்து விடுங்கள்.” இப்படிச் சொன்ன என்மேல், காமராசர் சினங் கொள்ளவில்லை. - உள்ளத்தில் என்ன நினைத்தார் என்பது விளங்கவில்லை. புவமுறுவலோடு, “சரி சரி” என்று மட்டும் பதில் கூறினார். நான், அப்புறம் அங்குத் தாமதிக்க விரும்பவில்லை. i முதலமைச்சரை வணங்கிவிட்டு வெளியே வந்தேன். எனது அறுவலகத்திற்குத் திரும்புவதற்கு முன்பு, முதலமைச்சரின் தனி டி .வியாளரான திரு. கிருஷ்ணய்யாவின் காதில் மேற்படி 1வண்டுகோளைப் போட்டு வைத்தேன். "நான். சுட்டிக்காட்டியதே. நிர்வாக மரபு என்பதைச் சமயம் பlத்து, முதலமைச்சரிடம் சொல்லி வையுங்கள்” என்று அவரிடம் 1.க டுக்கொண்டேன். நாள்தோறும் ஒருமுறை, உதவியாளர் கிருஷ்ணய்யாவோடு லைபேசியில் பேசினேன் மேற்படி நிகழ்ச்சியை ரத்து செய்துவிட்டாரா என்று விசாரிப்பேன். _

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவு_அலைகள்-3.pdf/99&oldid=788709" இலிருந்து மீள்விக்கப்பட்டது