பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா 4. முன்னோக்கிப் பார் பிறர் வணங்க வாழும் பெருமை வேண்டும். பெருமைவர வேண்டும் என்றால், அதற்கு நாம் நம்மைத் தகுதியாக்கிக்கொள்ள வேண்டும் அல்லவா! தலைமை என்பது தானாக வந்துவிடுவதில்லை. தகுதியின் மிகுதியால், மற்றவர்கள் மதிக்கப்படுகிற நிலைமை ஏற்படுவதால் மட்டுமே கிடைக்கக்கூடிய பரிசாகும். சும்மா இருந்துகொண்டு, சோம்பிக்கிடந்து கொண்டு, வம்புகள் பேசிக்கொண்டு வதந்திகளைப் பரப்பிக் கொண்டு, காலத்தை வீணாக்கிக் கழிக்கிற மனிதர்கள் - மற்றவர்களுக்கு அடிமையாகத்தான் வாழ்வார்களே தவிர, ஆள்கிற தலைமைப்பேற்றை அடையமாட்டார்கள். பிறகு, தலைமைத் தோற்றம் எப்படிக் கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? நீ முன்னோக்கிப் பார்க்கும்போது? முன்னோக்கி எப்போது பார்ப்பது? எப்படிப் பார்ப்பது? - . முன்னால் நோக்கித்தான் பார்க்கிறோம். முன்னால் பார்த்துத்தானே நடக்கிறோம். இது என்ன புது நோக்கு? என்று நீங்கள் கேட்டால், அது கேட்கப்படவேண்டிய கேள்விதான்! நம் வாழ் வைப் பற்றி, எதிர்காலத்தைப் பற்றி, முன்னதாகவே நோக்கத்தில் வைத்துக் கொள்ளுதல்.