பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/47

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


நிமிர்ந்து நில் துணிந்து செல் 47 'இந்திய மக்கள் எல்லோரும் நல்லவர்கள்தான். ஒருவர் கஷடப்படும்போது, கூட வந்து உதவி செய்வார்கள். அந்த நபர், கஷடத்திலிருந்து விடுபட்டு, கொஞ்சம் மேம்பட்டுபோகிறார் என்று தெரிந்த உடன், அவரது காலை இழுத்து விட்டு விடுவார்கள்.' இந்தக் கருத்தை இங்கே எழுதுகிறபோது, எனக்கு ஒரு நண்டு ஜோக் நினைவுக்கு வருகிறது. சிங்கப்பூரில் , அங்காடியில் ஒருவன் நண்டு வியாபாரம் செய்து கொண்டிருந்தான். அவன் வலப்புறத்தில் ஒரு அண்டா நிறைய நண்டுகள். அதை தாம்பாளம் போட்டு, மூடிவைத்திருந்தான். அவனது இடதுபுறத்தில் இருந்த அண்டாவில் நிறைய நண்டுகள் இருந்தன. ஆனால் அதற்கு மூடி எதுவும் அவன் வைக்கவில்லை. நண்டு வாங்க வந்த ஒருவர் இதென்ன ஆச்சரியமாக இருக்கிறது? இந்த அண்டா நண்டுக்கு மூடி, அந்த அண்டாவுக்கு ஏன் இல்லை என்றார். அவனோ, மூடியில்லாததில் இந்திய நண்டுகள் இருக்கின்றது. மூடியிருப்பதோ மேல்நாட்டு நண்டுகள் என்றான். புரியவில்லையே என்று உதட்டைப் பிதுக்கினார் கேட்டவர். இதோ பாருங்கள் என்று மேல்நாட்டு அண்டாவின் மூடியைத் திறந்து வைத்தான் வியாபாரி. அந்த அண்டாவிலிருந்து ஒரு நண்டு வெளியே வர முயற்சி செய்தபோது, மற்ற நண்டுகள், கீழிருந்து