பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 67 மனிதனையும், மற்ற மிருகங்களையும் உங்கள் மனக்கண் முன்னே கொண்டு வந்து நிறுத்திப் பாருங்கள். மனிதனுக்கு மட்டுமே முதுகெலும்பு நிமிர்ந்து நிற்பதாக அமைக்கப்பட்டு இருக்கிறது. மற்ற நாய், மாடு, குதிரை, யானை, ஒட்டகம் போன்ற எல்லாவற்றுக்குமே முதுகெலும்பு வளைவாக வைக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், முதுகு வளைந்த பிராணிகளால் எடையைத் தூக்க முடியாமல் தாங்க முடிகிறது. இந்த முதுகெலும்பின் காரணமாக, எடைகளை, வண்டிகளை இழுக்கமுடிகிறது. ஆனால் அதே பணியை மனிதன் தலையில் தூக்குகிறான். சிரமப்பட்டு முதுகிலே ஏற்றிக் கொள்கிறான். எடைகளை இழுத்துக் கொண்டுபோக முடியவில்லை. அதனாலேதான் ஒரு இளைஞனை அல்லது ஒரு சிறுவனைப்பார்த்து, நிமிர்ந்து நில், உயர்ந்து நில், எழுந்து நில் என்கிறோம். அவர்கள் நிமிர்ந்து நிற்க நிற்கத்தான் நெஞ்சிலே ஒரு உரம் ஏற்படுகிறது. ஒரு திறம் உண்டாகிறது. ஒரு தரம் ஏற்படுகிறது. தன்னம்பிக்கை உண்டாகிறது. தன்னைப் பற்றிய தனித்தன்மையும் மேலோங்கி வருகிறது. அகவே, மனிதர்களாகிய நாம் எப்பொழுதும் செய்ய வேண்டிய ஒன்று நிமிர்ந்து உட்காருவதும். நிமிர்ந்து நிற்பதும். நிமிர்ந்து நடப்பதுமேயாகும். நாம் எதிர் காலத்தில் தலைநிமிர்ந்து வாழ்வதற்கு இந்த நிமிர்ந்து நிற்றல்தான் கைகொடுத்து வழிநடத்திக் கரை சேர்க்கும்.