பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 93 கையில் நீண்ட தாண்ட உதவும் கோலைத் தூக்கிக் கொண்டு 4 முதல் 6தப்படி வரை ஓடிப் பழகுதல். இவ்வாறு 10 முறை ஓடிப் பார்த்த பிறகு உண்மையாக ஓடி வந்து தாண்டக் கூடிய முழு தூரத்தையும் அதாவது 40 முதல் 42 மீட்டர் தூரம் உள்ளதை, 20 தடவை ஓடிப் பார்த்தல். இந்தப் பயிற்சி ஏன் என்றால் அந்தக் குறிப்பிட்ட தூரத்திற்குள் முழுமையான வேகத்தைப் பெற்றுக் கொள்ளத்தான். அப்பொழுது தானே உயரமாக உயரே துள்ளிப் போக முடியும்! அதன்பின், தான் அதிகமாகத் தாண்டி முடிக்கின்ற உயரத்தில் குறுக்குக் கம்பத்தை வைத்து. 15 அல்லது 20 தடவைகள் தாண்டிப் பழகுதல். இந்தப் பயிற்சிகள் முடிய ஏறத்தாழ, 3 மணி நேரம் ஆகி விடுகிறது. இதன் பிறகு பயிற்சி செய்கிற வீரனும், பயிற்சியாளரும் அமர்ந்து கொண்டு, பயிற்சிகளில் பெறுகிற சிக்கல்கள், ஏற்படுகிற தவறுகள், குறுக்கீடுகள் பற்றியெல்லாம் பேச்சுப் பரிமாற்றம் செய்து, பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கின்றனர். உதாரணத்திற்கு: பியூப்கா தாண்டிய தூரம் 6.3 மீட்டர் என்றால் அந்த உயரத்தையே பலமுறை தாண்டிப் பழகுதல். இத்துடன் இரண்டாவது நாள் பயிற்சி முடிகிறது.