பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா மூன்றாம் நாள்: ஏறத்தாழ 2% மணி நேரம் ஜிம்னாஸ் டிக்ஸ் பயிற்சிகள் செய்தல். கோலூன்றித் தாண்டுபவருக்கு கோலினை ஊன்றுதல், கோலில் தொங்குதல், அதிலிருந்து துள்ளி குறுக்குக் கம்பத்தை கடத்தல். அப்படியே உடலை சுழற்றி மறுபுறம் துள்ளி விழுதல் போன்ற திறன்களுக்காக, கம்பத்தில் தொங்குதல், சுற்றுதல், புல் அப்ஸ் (Pull ups) கைகளில் தலை கீழாக நிற்றல் போன்ற பயிற்சிகள் செய்யப்படுகின்றன. இது காலையில் செய்கிற பயிற்சிகளாகும். அது போலவே, மாலையில் ஓட்டம், தாண்டல், எடைத் தூக்குதல், 100, 200 மீட்டர் தூரங்களை பல முறை ஓடுதல் போன்ற பயிற்சி முறைகளுடன். மூன்றாம் நாள் முடிவு பெறுகிறது. நான்காம் நாள்: நல்ல ஓய்வு நாள். அதாவது உண்டு உறங்கி, சோம்பலுடன் போக்குகின்ற ஓய்வு நாள் அல்ல, மசாஜ், நீச்சல், சோனா குளியல் (Sauna bath) அதாவது வென்னிர்க் குளியல் போன்றவற்றைச் செய்து, உடலைப் பக்குவப்படுத்துகின்ற பணியில் இருத்தல். ஐந்தாம் நாளும் ஆறாம் நாளும்: திறன் பயிற்சிகளில் (Training) ஈடுபடுதல்; தாண்டுகின்ற திறன்களில் உள்ள நுணுக்கங்களை அதிக எண்ணிக்கையில் முயன்று பழகி, தேர்ச்சி பெறுதல். ஏழாம் நாள் ஓய்வு.