பக்கம்:நிமிர்ந்து நில் துணிந்து செல்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நிமிர்ந்து நில் துணிந்து செல் 95 இப்படி கஷடமான பயிற்சிகளில் ஈடுபடுகின்றீர் களே? உங்களுக்கு களைப்பு வர வில்லையா? எரிச்சல் ஏற்படவில்லையா? என்று கேட்டால். அந்த உலக மகாவீரன் கூறுகிற பதில்தான் நம்மை வியப் பில் ஆழ்த்துகிறது. 'எனக்கு எதிலும் முதலாவதாக வரவேண்டுமென்ற வேகம் உண்டு. எனக்குப் பிடிக்காவிட்டாலும் கூட, பயிற்சியாளர்கள் கூறுகிற பயிற்சி முறைகளை அப்படியே பின்பற்றி செய்கிறேன். நான் உலக வீரனாக வந்துவிட்ட பிறகு, என்னால்தான் இது முடிந்தது. இந்த சாதனை கூட என் முயற்சியின் பலன்தான் என்று சொல்ல மாட்டேன். எனக்குக் கிடைத்த பெரிய அதிர் ஷடம். என் பயிற்சியாளராக பெட்ரோவ் அமைந்ததுதான். அவரது அறிவும் அனுபவமும் பயிற்சியும் தான். என்னை உலக சாதனை ஏற்படுத்த உதவியது. உந்தியது உற்சாகம் தந்தது. -- இவ்வளவு கஷடமான பயிற்சிகள் செய்தும், அவற்றையே தினசரி செய்தும் எனக்கு அலுப்புத் தட்டவில்லை காரணம் என்மனம் அதில் ஆழ்ந்து போய் விட்டது. என்னை உலகுக்கு வெளிப்படுத்திக் காட்ட இந்த விளையாட்டு எனக்கு உதவியிருக்கிறது. அதுமட்டுமல்ல நான் தாண்டுகிற போது. பார்க்கிற பொதுமக்கள் பேரானந்தம் அடைகின்றனர். பலநூறு சிறுவர்கள் இந்தப் பயிற்சியில் ஈடுபட ஓடி வருகின்றனர். ஆகவே, எனது விளையாட்டு மற்றவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிற ஒன்றே எனக்கு பரமானந்தமாக இருக்கிறது”