பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டிருக்கும். அப்படிப்பட்ட கூட்டங்களிலும் என் அண்ணன்கள் அவர்களது நண்பர்களுடன் நானும் கலந்து கொண்டிருக்கிறேன். ஒரு வருடம் - 1932 அல்லது 1933ஆக இருக்கலாம் - இலங்கைச் சுற்றுப்பயணத்தை முடித்து விட்டு வந்த பண்டித ஜவகர்லால் நேரு அவர் மனைவி கமலா நேரு, மகள் இந்திரா ஆகிய மூவரும் தமிழ்நாட்டிலும் சுற்றுப்பயணம் செய்தனர். மூவரும் திருநெல்வேலி வந்தபோது, மாலையில் ஆற்று மணலில் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. பெரும் ஜனத்திரள் கூடியது. நாங்களும் போயிருந்தோம் நேருஜியையும் அவர் மனைவியையும் மகளையும் நன்கு பார்க்க முடிந்தது. தினந்தோறும் நாங்கள், சகோதரர்களும் மற்றும் நண்பர்களும் ஒரு குழுவாகச் சேர்ந்து பள்ளிக்கூடம் போவோம். கோபாலசாமி கோயில் ரதவீதியில் நடந்து, தெற்கு பஜார்வழியாகப் போய், மேலும் சில தெருக்களைக் கடந்து செல்ல வேண்டும். சுதந்திரப் போராட்டம் தீவிரநிலை அடைந்த காலத்தில், தெற்கு பஜாரில் உள்ள துணிக்கடைகளின் முன்பாகக் காங்கிரஸ் தொண்டர்கள் - ஆண்களும் பெண்களும் - நின்றுகொண்டு அமைதியான முறையில் (சாத்வீக) மறியல் செய்வார்கள். கடைகளுக்கு துணிவாங்க வருகிறவர்களின் முன்னே நின்று வழிமறித்து, அந்நியத் துணியை வாங்காதீர்கள் அயல்நாட்டுமில் துணிகளை பகிஷ்கரியுங்கள்! கதர் துணிகளை உபயோகியுங்கள் என்று பணிவுடன் கேட்டுக் கொள்வார்கள். அச்சிட்ட நோட்டீஸ்கள் கொடுப்பார்கள். சிலபேர் துணிவாங்காது திரும்பிப் போய்விடுவார்கள். சிலர் துணிந்து, தொண்டர்களை விலக்கிவிட்டு, கடைக்குள் சென்று தங்களுக்குத் தேவையான துணிகளை வாங்கிக்கொண்டு செல்வார்கள். தொண்டர்கள் தங்கள் பணியை தொடர்ந்து நாள் முழுதும் செய்து கொண்டு நிற்பார்கள். - பள்ளிக்கூடத்துக்கு போகிற போதும், பள்ளிவிட்டு வருகிற போதும் நாங்கள் இக் காட்சிகளை பார்த்தவாறு நடப்போம். மறியல் போராட்டம் தொடர்ந்து நடைபெறவும், அரசு பலாத்காரத்தை உபயோகித்து தொண்டர்கள் கலைந்துசொல்வற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது. போலீசார் தொண்டர்களை நிலைபெற்ற நினைவுகள் 3; 121